Home
News

மீசையை முறுக்கும் BSNL.. தம்பி Jio ஓரம்போ.. ரூ.139-க்கே தினமும் 1.5GB டேட்டா.. முடுஞ்சா நீ கொடுத்து பாரு..

இந்தியாவின் டெலிகாம் துறையில் யாரும் எதிர்பார்த்திடாத மாற்றங்கள் நிகழந்து வருகிறது. இத்தனை நாட்களாக எந்தவொரு டெலிகாம் நிறுவனம் பெஸ்ட் என்று தலையில் தூக்கி வைத்து மக்கள் ஆடி வந்தார்களோ, அந்த நிறுவனமே இப்போது கடுமையான விலை ஏற்றதுடன் மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டதாக மக்களே கருதுகிறார்கள். ஜியோவை தான் சொல்கிறோம் என்று உங்களுக்கு தோன்றினாலும், எல்லா டெலிகாம் பயனர்களும் கவலைப்படும் அளவிற்கு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சுயநல சுயரூபத்தை காண்பித்துள்ளன.

குறைந்த விலையில் அதிக நன்மையை வழங்கும் தரமான நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோவை மக்கள் இத்தனை நாள் தலைமேல் வைத்து கொண்டாடி வந்தனர். ஆனால், இப்போது அத்தகைய கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜியோவின் கடுமையான விலை ஏற்றம் அமைந்துள்ளது. அதிக விலை காரணமாக மக்கள் இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பக்கம் மாறத் துவங்கிவிட்டனர்.

மீசையை முறுக்கும் BSNL.. Jio ஓரம்போ..ரூ.139-க்கே தினமும் 1.5GB டேட்டா

மீசையை முறுக்கும் BSNL.. தம்பி Jio ஓரம்போ:

இத்தனை வருடங்களாக யாருமே மதிக்காமல் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது இப்போது அனைத்து இந்திய மக்களின் கவனமும் திரும்பியுள்ளது. காரணம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மட்டுமே மிகமிக மலிவு விலையில் தினசரி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை வழங்கி வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்தியா முழுக்க பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்கவிருக்கிறது.

இதனை தொடர்ந்து அடுத்த 9 மாதங்களுக்குள் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) நெட்வொர்க் சேவையும் மக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்துவிடும் என்று பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் உறுதியளித்துள்ளது. இப்போதே இந்தியாவில் பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி கிடைக்க துவங்கியுள்ளது. ஒவ்வொரு வட்டமாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை விரிவுபடுத்தும் வேளையில் பிஎஸ்என்எல் மும்முரமாக பணியாற்றி வருகிறது. இதற்கிடையே இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்க பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 139 திட்டம் (BSNL Rs 139 Plan):

இப்போது இந்திய மக்கள் மற்றும் தனியார் டெலிகாம் நிறுவன பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ. 139 விலையில் ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 139 திட்டம் (BSNL Rs 139 Plan) தினசரி 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது.

இந்த BSNL Rs 139 Plan திட்டம் 28 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த விலையில் இத்தகைய நன்மையை ஜியோ நிறுவனத்தால் கூட வழங்க முடியவில்லை என்பதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மீசையை முறுக்கிக்கொண்டு தனது புதிய வியாபார ஆட்டத்தை துவங்கியுள்ளது. இந்த கவர்ச்சிகரமான திட்டத்தை பார்த்து, பல ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் தாவ துவங்கிவிட்டனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 139 Plan With 1.5GB Daily Data Unlimited Voice Calls Daily 100 SMS Benefits For 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X