தம்பி Jio.. நீ ரூ.198-க்கு கொடுத்தா.. அண்ணன் நான் ரூ.139-க்கு கொடுப்பேன்ப்பா.. அட்ராசிட்டி செய்யும் BSNL..
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தனியார் நெட்வொர்க்குகளின் சமீபத்திய விலை உயர்வுகளால், பல மொபைல் பயனர்கள் இப்போது மிகவும் மலிவு ரீசார்ஜ் திட்டங்களுக்காக பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கியுள்ளனர். இதனால், BSNL நெட்வொர்க்கிற்கு பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். மலிவு விலை திட்டங்களால் தான் மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் செல்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜியோ ரூ. 198 விலையில் புதிய திட்டத்தை அதிரடியாக அறிவித்து, மக்களை தன் வசம் ஈர்க்க முடிவு செய்தது.
இந்த திட்டத்தை அறிமுகம் செய்தவுடன், மக்கள் ஜியோ பக்கம் மாறத்துவங்கிவிடுவர் என்று அம்பானி கணக்கிட்டார். ஆனால், பிஎஸ்என்எல் இந்த அருமையான வாய்ப்பை நழுவவே விடக்கூடாது என்பதில் தெளிவாகவும், தீர்மானமுமாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நம்பி, மனம்மாறி மாறத்துவங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை நழுவவிட்டால், இனி பிஎஸ்என்எல் தலை ஓங்கவே முடியாது என்பதை நிறுவனம் நன்றாக உணர்ந்திருக்கிறது.

தம்பி Jio.. நீ ரூ.198க்கு கொடுத்தா.. அண்ணன் நான் ரூ.139-க்கு கொடுப்பேன்.. BSNL-ன் அட்ராசிட்டி ஆரம்பம்:
இதனால் தானோ என்னவோ, பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஜியோவின் மாஸ்டர் பிளானிற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக, ஜியோவை விட மிக-மிக குறைந்த விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து, மக்களின் கவனத்தை BSNL நிறுவனம் மீண்டும் ஒரு முறை ஈர்த்துள்ளது. தம்பி ஜியோ நீங்க 198 ரூபாய்க்கு புதிய திட்டம் கொடுத்தா, அண்ணன் நான் சும்மா இருப்பேனா?
உங்களை விட விலை குறைவா, பலன் நிறைய கிடைக்கும்படி 139 ரூபாய்க்கு புது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கொடுப்பேன்ப்பா என்று BSNL இப்போது அட்ராசிட்டி செய்து வருகிறது. இந்த இரண்டு டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையே நிகழும் கடும் போட்டி யாருக்கு லாபம் தருகிறதோ இல்லையோ, கண்டிப்பாக மக்களுக்கு லாபம் தருகிறது. உண்மையை சொல்ல போனால் மக்கள் இப்போது படு குஷியில் இருக்கிறார்கள். அதற்கு பிஎஸ்என்எல் அறிவித்து ரூ. 139 திட்டம் ஒரு காரணமாகும்.
பிஎஸ்என்எல் ரூ. 139 திட்டம் (BSNL Rs 139 Plan):
இப்போது இந்திய மக்கள் மற்றும் தனியார் டெலிகாம் நிறுவன பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ. 139 விலையில் ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 139 திட்டம் (BSNL Rs 139 Plan) தினசரி 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது.
இந்த BSNL Rs 139 Plan திட்டம் 28 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த விலையில் இத்தகைய நன்மையை ஜியோ நிறுவனத்தால் கூட வழங்க முடியவில்லை என்பதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புது வியாபார ஆட்டத்தை துவங்கி, டெலிகாம் துறையில் அட்ராசிட்டி செய்து வருகிறது. இந்த கவர்ச்சிகரமான திட்டத்தை பார்த்து, பல ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் தாவ துவங்கிவியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








