Home
News

BSNL அதிரடி: 13 ரூபாய்க்கு இப்படி ஒரு திட்டமா? டேட்டா பயனர்களை கவரும் புது பிளான்.. ஒன்ஸ் ட்ரை செய்யுங்க..

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), டெலிகாம் துறையில் நடக்கும் போட்டியை ஈடுகட்ட பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமாக ரீசார்ஜ் செய்யும் திட்டமாக ரூ.13 விளங்குகிறது.

என்ன தான் டெலிகாம் நிறுவனங்கள் பல விலையில், பல விதமான நன்மைகளுடன் பல திட்டங்களை வழங்கி வந்தாலும், எப்போதும் மக்களிடையே மலிவு விலையில் கிடைக்கும் திட்டங்களுக்கு தான் மவுசு அதிகமாகவுள்ளது. மக்களை கவர வேண்டும் என்றால் விலை மலிவாக இருந்தால் மட்டும் போதாது. மலிவு விலைக்கு ஏற்ற நன்மையையும் நிறுவனம் வழங்க வேண்டும்.

BSNL அதிரடி: 13 ரூபாய்க்கு இப்படி ஒரு திட்டமா? ஈர்க்கும் புது பிளான்..
பிஎஸ்என்எல் ரூ.13 டேட்டா வவுச்சர் திட்டம் (BSNL Rs 13 Data Voucher Plan):

இந்த எதிர்பார்ப்பை, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் ரூ.13 விலை கொண்ட திட்டத்துடன் மக்களை கவர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை மிகவும் மலிவாக இருப்பதனாலோ என்னவோ இதை மக்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்கள். குறிப்பாக, தினசரி டேட்டா வரம்பு நிறைவடைந்தவுடன் இணைய சேவை தேவைப்படும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.13 திட்டம் (BSNL Rs 13 Data Voucher) ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். இது டேட்டா நன்மையை மட்டும் வழங்கக்கூடிய ஒரு டேட்டா திட்டமாகும். இது வெறும் 13 ரூபாய் விலையில் 2 ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefits) அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இது 1 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது.

டேட்டா பற்றாக்குறை இருக்கும் போது, இந்திய மக்களால் அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட திட்டமாக இந்த டேட்டா திட்டம் (BSNL data plan) இருக்கிறது. சிறியவர்கள் இந்த திட்டத்தை கேம் (Game) விளையாட மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube), போன்ற பயன்பாட்டிற்காக இந்த திட்டங்கள் அதிகம் ரீசார்ஜ் செய்யப்படுகின்றன.

மறுபுறம், பெரியவர்கள் இந்த திட்டத்தை அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon prime videos), நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), போன்ற OTT பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள். விருப்பமான திரைப்படம் மற்றும் சீரிஸ்களை டவுன்லோட் செய்து பார்க்க இந்த திட்டம் ஏற்றது. இதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.18 திட்டத்தை வழங்குகிறது.

தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் டேட்டா பிளான் (Data plan with 1GB data per day):

இந்த திட்டம், அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 2 நாட்கள் ஆகும். இது 2 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேகம் 40 ம்பப்ஸ் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மையையும் 2 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் மலிவு விலையில் போதுமான இன்டர்நெட் வேகம் வேண்டுமென்றால், நீங்கள் இந்த மிகவும் மலிவு விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம். இதுபோல், உங்களுக்கு தெரிந்த ஏதேனும் சிறப்பான திட்டம் இருந்தால், அதை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 13 Data Voucher Offers 2GB Data For 1 Day Validity Rs 18 Plan With 1GB Per Day For 2 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X