Home
News

இறங்கி அடித்த பிஎஸ்என்எல்.. ரூ.100 கூட இல்ல.. 12 மாசத்துக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு வருடாந்திர திட்டத்தை (Yearly Plan) கொடுக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டியில் மாதாந்திர கணக்கில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பிரித்து கொடுக்கிறது. இதில் மாதத்துக்கு தேவைப்படும் தொகையானது ரூ.100 கூட இல்லை என்பதே கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. விவரங்கள் இதோ.

பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், தனியார் டெலிகாம் நிறுவனங்களில் கிடைக்காத விலை மற்றும் சலுகைகள் பிஎஸ்என்எல்லில் கிடைக்கின்றன. அதிலும் வருடாந்திர திட்டங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மலிவாக இருக்கின்றன. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி குறைவான விலையில் வருடாந்திர திட்டங்கள் வருகின்றன.

இறங்கி அடித்த பிஎஸ்என்எல்.. ரூ.100 கூட இல்ல.. 12 மாத வேலிடிட்டி!

இதில் பிஎஸ்என்எல் ரூ 1198 வருடாந்திர திட்டமானது (BSNL Rs 1198 Yearly Plan) ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதாந்திர கணக்கில் சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் ஒவ்வொரு மாதத்துக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் பிரித்து கொடுக்கப்படும்.

ஆகவே, ஒரு மாதத்துக்கு 300 நிமிடங்களுக்கான லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. அதேபோல 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும். இப்படி 12 மாதங்கள் வரையில் சலுகைகள் கிடைக்கும்.

ஆனால், இந்த டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களை அந்த 30 நாட்களுக்கு முன்பாகவே பயன்படுத்திவிட்டால், அடுத்த மாதத்துக்கான சலுகைகள் வரும் வரையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு 1 நிமிடத்துக்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு எம்பி டேட்டாவுக்கு 25 பைசா வசூலிக்கப்படும். எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும்.

இருப்பினும், 12 மாதங்கள் முழுவதும் உங்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. ஆகவே, செகண்டரி சிம் கார்டாக உங்களிடம் பிஎஸ்என்எல் இருந்தால், ஓரளவு சலுகைகளுடன் இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் கிடைக்காது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால் ரூ.99ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, ரூ.100-க்கும் கீழ் சலுகைகள் கிடைக்கிறது.

இதேபோல 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதாந்திர கணக்கில் சலுகைகள் கிடைக்காது. தினசரி லிமிட் மற்றும் லம்ப்-சம் முறையில் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த திட்டம் டேட்டா சலுகைகளை விரும்பும் கஸ்டமர்களுக்கும் பக்காவான தேர்வாக இருக்கும். இதன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 897 ப்ரீபெய்ட் திட்டத்திலேயே 6 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 180 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதில் டேட்டா மட்டும் லம்ப்-சம் சலுகையாக கிடைக்கிறது. ஆகவே, 180 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே 90 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுவிடும். இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

40 கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் வழக்கம் போலவே கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1198 Plan With Voice Calls 3GB Data 365 Days Validity Check One Year Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X