BSNL-க்கு வருது கூட்டம்.. ஏழைக்கு ஏத்த காசு.. மாதம் ரூ.99 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!
யாரு என்ன விலை ஏத்துனாலும், நான் கம்மி விலையில்தான் கொடுப்பேன் என்பது போல பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், எந்தவித கட்டண உயர்வும் இல்லாமல் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் திட்டங்களை பற்றி இவ்வளவு நாள் தெரியாத கஸ்டமர்கள்கூட இப்போது சலுகைகளை கண்டு வியக்கின்றனர். மாதம் வெறும் ரூ.99 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை 365 நாட்களுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றிய முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
இவ்வளவு நாட்களாக பிஎஸ்என்எல் கஸ்டமர்கள், மற்ற நிறுவனங்களுக்கு மாற திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், மற்ற நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு இதுவே போதும், இன்னும் சில மாதங்களில் 4ஜி சேவையும் வரப்போகுது என்று அப்படியே பின்வாங்கிவிட்டனர். இப்போது, மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களும் பிஎஸ்என்எல்லுக்கு மாற திட்டமிடுகின்றனர்.

பிரதமர் மோடி தலையிலான அமைச்சரவை கூட்டத்தில் பிஎஸ்என்எல்லுக்கு கடந்த ஆண்டு ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அப்போதில் இருந்து 4ஜி சேவைகளுக்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. பல மாநிலங்களில் சோதனை ஓட்டம் முடிந்து, சேவைகள் தொடங்கிவிட்டன. சில மாதங்களில் 4ஜி சேவை நாடு முழுவதும் வருகிறது. ஆகவே, பிஎஸ்என்என் புத்துயிர் பெற இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியே கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்க செய்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, வருடம் முழுவதும் எளிதாக சிம் கார்ட்டை ஆக்டிவாக வைத்திருக்க முடியும்.
இதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைப்பதால், அதிகப்படியான சலுகைகளை கொடுக்காமல், தேவைக்கேற்ப சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, இந்த திட்டத்தில் 12 மாதங்களுக்கு சலுகைகள் பிரித்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கும். அதேபோல 3 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதற்கு லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், 30 எஸ்எம்எஸ் சலுகையை ஒவ்வொரு மாதமும் பெற்று கொள்ளலாம். இப்படி மூன்று சலுகைகளும் 12 மாதங்களுக்கும் கிடைக்கும். இந்த சலுகைகளுக்கான மாதாந்திர செலவை கணக்கிட்டால், வெறும் ரூ.99ஆக மட்டுமே இருக்கிறது. இந்த மலிவு விலைக்கு வேறு எந்த நிறுவனத்திடமும் திட்டங்கள் கிடையாது.
சொல்லப்போனால், மற்ற நிறுவனங்களில் சிம் கார்ட்டை ஆக்டிவாக வைத்திருக்க எவ்வளவு மலிவான விலை திட்டத்தை தேர்ந்தெடுத்தாலும், இந்த விலைக்கு கொடுக்க முடியாது. இருப்பினும், கஸ்டமர்களுக்கு அதிகப்படியான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் வேண்டுமானால், ரூ.1999 திட்டத்துக்கு செல்லுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அதிப்படியான டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் உள்ளிட்ட கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கிடைக்கிறது. இதுபோக நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். அதேபோல லம்ப்-சம் டேட்டா சலுகையும் இதில் கிடைக்கிறது.
அதன்படி 600 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு எந்த லிமிட்டும் கிடையாது. 365 நாட்கள் வேலிடிட்டியில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை பெற்று கொள்ள முடியும்.
சொல்லப்போனால், தினசரிக்கு 1.5 ஜிபிக்கும் மேல் கிடைக்கிறது. இந்த முக்கிய சலுகைகள் போக கூடுதலாக பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. வாவ் எண்டர்டெயின்மெண்ட் (WOW Entertainment) சந்தா, ஜிங்க் மியூசிக் சந்தா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், லைஸ்டின் பாட்காஸ்ட், சேலன்ஜஸ் அரினா உள்ளிட்டவற்றின் சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








