Home
News

BSNL-க்கு கும்பிடு.. மாசத்துக்கு வெறும் ரூ.100 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3ஜிபி டேட்டா

இனி அடிச்சிக்க ஆளு இல்லனு சொல்லும்படி மாதத்துக்கு வெறும் ரூ.100 செலவு செய்தால் போதும் 365 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எம் சலுகைகளை மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. இந்த அடிமட்ட விலைக்கு எப்படி சலுகைகள் கொடுக்க முடிகிறது? முழு சலுகைகள் எப்படி இருக்கின்றன?

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.1198 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்கு 365நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.100 மட்டுமே செலவாகிறது. இந்த விலைக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மாதாந்திர கணக்கில் பிரித்து வழங்குகிறது.

BSNL-க்கு கும்பிடு.. மாசத்துக்கு ரூ.100 போதும்.. 365 நாட்கள் திட்டம்!

பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (BSNL Rs 1198 Plan Yearly Validity): இந்த மலிவான வருடாந்திர திட்டத்தில் (Cheapest Yearly Plan) 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் மாதந்தோறும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு ஒரு மாதத்துக்கு 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

இப்படி 12 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 3,600 நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roming Voice Calls) கிடைக்கிறது. அதேபோல 36 ஜிபி டேட்டா மற்றும் 360 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இந்த சலுகைகள் எப்படி பார்த்தாலும் மற்ற நிறுவனங்களில் கிடைக்காதவை.

ஆகவே, வருடாந்திர வேலிடிட்டியில் அடிமட்ட விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை வாய்ஸ் கால்களுக்கு லிமிட் இருக்கக் கூடாது. அன்லிமிடெட் சலுகையில் இருக்க வேண்டும் டேட்டா குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1999 திட்டம் வருடாந்திர வேலிடிட்டி (BSNL Rs 1999 Plan Yearly Validity): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு எந்த லிமிட்டும் கிடையாது. 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகளும் முந்தைய திட்டத்தைவிட கூடுதலாகவே இருக்கின்றன.

அதாவது, முந்தைய திட்டத்தில் மாதத்துக்கு 30 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த வருடாந்திர திட்டத்தின் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. அதேபோல முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 36 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுபோக 600 ஜிபிக்கு பிறகும் பேர் யூசேஜ் டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, 365நாட்களுக்குள் 600 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், உங்களுக்கு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இப்படி ஒட்டுமொத்தமாக சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ 1999 வருடாந்திர திட்டம். ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் வேண்டுமானால், இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1198 Plan With 365 Days Validity 3GB Data 300 Minutes Voice Calls Check Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X