BSNL யாரு சாமி நீ.. மக்களே தினமும் ரூ.3 போதும்.. 12 மாதத்திற்கு நோ-ரீசார்ஜ் பிளான்.. கூட்டம் கூட்டமா ரீசார்ஜ்!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் உள்ள அதன் வடிக்கையாளர்களுக்காக 12 மாதங்களுக்கு நான் ஸ்டாப் நன்மைகளை வழங்கும் புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலையில் நீண்ட நாள் ரீசார்ஜ் விருப்பத்தை (BSNL long term recharge plan) தேடும் வாடிக்கையாளர்களுக்கு இதை விட சிறந்த திட்டம் கிடைக்க வாய்ப்பில்லை. தினசரி வெறும் 3 ரூபாய் செலவில் 365 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கும் திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) அல்லது வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களால் வழங்க முடியாத மலிவு விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் நீண்ட வேலிடிட்டி உடன் வழங்கியுள்ளது. அதாவது, 12 மாதங்கள் என்று கூறும் பொழுது, மொத்தமாக 365 நாட்களுக்கு, 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் திட்டத்தை (BSNL 1 year validity plan) வெறும் 3 ரூபாய் தினசரி கட்டணத்துடன் வழங்கியுள்ளது.

BSNL யாரு சாமி நீ.. மக்களே தினமும் ரூ.3 போதும்.. 12 மாதத்திற்கு நோ-ரீசார்ஜ்ஜா?
பிஎஸ்என்எல் மலிவு விலையில் 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்கிய திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan). இந்த திட்டம் தரும் நன்மைகள் மற்றும் முழு விபரங்கள் இங்கே. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 1198 பிளான் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் முழுக்க, அதன் பயனர்களுக்கு தேவைப்படும் வாய்ஸ் கால்ஸ் நன்மை, டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மாதம் தவறாமல் வழங்குகிறது.
ஆம், இந்த திட்டத்தின் பயனர்கள் ஒவ்வொரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவிலான வாய்ஸ் (voice calls) மற்றும் டேட்டா (data) நன்மையை பெறுகிறார்கள். உதாரணமாக, இந்த திட்டம், ஒவ்வொரு மாதமும் 300 நிமிட வாய்ஸ் காலிங் நன்மையை (300 minutes voice calling) வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் பயனர்கள் 300 நிமிட டாக் டைம் (talk time) நேரத்தை பெறுகிறார்கள்.
பிஎஸ்என்எல் ரூ. 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan):
இது 12 மாதத்திற்கும் கிடைக்கும் படி, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தனித்துவமாக வடிவமைத்துள்ளது. அதேபோல், இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா (data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இதே போல ஒவ்வொரு மாதமும் சில குறிப்பிட்ட அளவில், மாதம் தவறாமல் வழங்கப்படும். இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 3GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது.
மொத்தமாக இந்த பிஎஸ்என்எல் 1198 பிளான் (BSNL 1198 Plan), 12 மாதத்திற்கும் (12 months benefit plan) சேர்த்து, 36GB டேட்டா நன்மையை தடையின்றி வழங்குகிறது. கூடுத்தல் டேட்டா நன்மை (extra data) தேவைப்படும் வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர்களை (BSNL data vouchers) அவர்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது.
அதிக மக்கள் ரீசார்ஜ் செய்யும் BSNL 12 மாத திட்டம்:
இந்த திட்டம் மொத்தமாக 12 மாதங்களுக்கு 360 SMS நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் அணைத்தும் தினசரி 3 ரூபாய் 2 பைசா என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதை விட குறைந்த விலையில் எந்தவொரு தொலைத்தொடர்பு (telecom) நிறுவனமும் 365 நாட்களுக்கு இத்தகைய நன்மைகள் அடங்கிய திட்டத்தை வழங்கவே இல்லை என்பதனால், இந்த திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications