Home
News

BSNL ஜீ உண்மையாவா சொல்றீங்க? தினமும் 3 ரூபாய் போதுமா? 365 நாளுக்கு டேட்டா, SMS, வாய்ஸ் எல்லாமேவா? எந்த பிளான்?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவில் மிகமிக குறைந்த விலையில் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Prepaid recharge plans) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் தினசரி கட்டணம் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே (Rs 3 per day charge plan) என்று பிஎஸ்என்எல் (BSNL) விளம்பரம் செய்துள்ளது. 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துடன் (BSNL prepaid plans) கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சமீப காலமாக பொதுமக்கள் எல்லோராலும் பயன்பெறும் வகையிலான மலிவு விலை திட்டங்களை (most affordable recharge plan) அதிக நன்மையோடு வழங்கி வருகிறது. அதிக நன்மையை நீண்ட வேலிடிட்டி உடன் (long term validity) வழங்கியும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது மக்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. உண்மையை சொல்ல போனால் பிஎஸ்என்எல் மக்கள் மனதில் தனக்கென்ற தனி இடத்தை பிடித்துவிட்டது.

BSNL ஜீ உண்மையாவா சொல்றீங்க? தினமும் 3 ரூபாய் போதுமா? 365 நாள் சேவை..

BSNL ஜீ உண்மையாவா சொல்றீங்க? தினமும் 3 ரூபாய் போதுமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நம்ப முடியாத இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் ஒரு திட்டம் 425 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 425 days validity plan) உடன் வருகிறது. மற்றொரு திட்டம், 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 365 days validity plan) நன்மையோடு வருகிறது. இந்த திட்டத்தில் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் தினசரி வெறும் 3 ரூபாய் செலவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இத்தகைய மலிவு விலையில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும், 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டங்களை வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சரி, இப்போது பிஎஸ்என்எல் வழங்கும் மலிவு விலை 365 நாள் திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம். இந்த திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan) என்ற பெயருடன் தற்போது பல BSNL வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan):

இந்த BSNL 1198 Plan திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் நீண்ட 1 வருட வேலிடிட்டி நன்மையை (1 year validity benefit plan) வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது 300 நிமிட வாய்ஸ் காலிங் நன்மையை (300 minutes voice calling) ஒவ்வொரு மாதமும் தவறாமல் வழங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் பயனர்கள் 300 நிமிட டாக் டைம் (talk time) நேரத்தை பெறுகிறார்கள். இது 12 மாதத்திற்கும் கிடைக்கும் வகையில் பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது.

அதேபோல், இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா (data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் இதே போல ஒவ்வொரு மாதமும் தவறாமல் வழங்கப்படும். இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 3GB டேட்டா நன்மை மற்றும் 30 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. மொத்தமாக 12 மாதத்திற்கும் (12 months benefit plan) சேர்த்து, 36GB டேட்டா மற்றும் 360 SMS நன்மையை நீங்கள் அனுபவிக்க முடியும்.

வெறும் 3 ரூபாய் 28 பைசா கட்டணத்துடன் 12 மாதத்திற்கு சேவை:

இந்த திட்டம் இலவச நேஷனல் ரோமிங் சேவையையும் வழங்குகிறது என்பது குறிப்பித்தக்கது. மேற்குறிய அணைத்து நன்மைகளையும் இந்த திட்டத்தின் பயனர்கள் தினசரி வெறும் 3 ரூபாய் 28 பைசா கட்டணத்துடன் 12 மாதத்திற்கு அனுபவித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திடம் இத்தகைய திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1198 Plan Rs 3 Per Day Charge For 365 Days Is The Most Affordable Prepaid Plan In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X