Home
News

BSNL மிரட்டிவிட்டாப்ல.. தினசரி வெறும் 3 ரூபாயில் 365 நாள் வேலிடிட்டி திட்டம்.. Jio, Airtel, Vi-லாம் ஷாக்..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தனது லோகோவை (BSNL Logo) சமீபத்தில் மாற்றியதை தொடர்ந்து பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL Prepaid Plan) தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் ஒரு வருடம் முழுக்க செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது 4 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் மிகவும் மலிவு விலை விருப்பமாக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை திக்குமுக்காட வைத்துள்ளது BSNL.

நீங்கள் மலிவு விலையில் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு பெஸ்டான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது (BSNL Prepaid Plan) இந்தியாவில் உள்ள அணைத்து பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரீசார்ஜ் (BSNL Recharge) செய்ய கிடைக்கிறது. உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) மட்டும் இருந்தால் போதும்.

BSNL மிரட்டிவிட்டாப்ல.. தினசரி வெறும் 3 ரூபாயில் 365 நாள் வேலிடிட்டி..

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1198 என்ற விலையுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan) திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் மற்றும் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். பிஎஸ்என்எல் ரூ 1198 ப்ரீபெய்ட் பிளான் (BSNL Rs 1198 Prepaid Plan) 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த திட்டம் உங்களுக்கு தினசரி வெறும் ரூ. 3 என்ற விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த விலைக்கு இந்த திட்டத்துடன் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டம் அதிகப்படியான வேலிடிட்டியை மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது. இதனால் தானோ என்னவோ, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்கவில்லை.

இருப்பினும், இந்த பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan) உங்களுக்கு 300 நிமிட டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. இது எல்லா நெட்வொர்க்குகளுக்கும் பொருந்தும் 300 நிமிட டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மைக்கு மாறாக, இந்த பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டம் (BSNL Rs 1198 Plan) மாதம் தோறும் உங்களுக்கு 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.

இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. தினசரி வெறும் 3 ரூபாய் செலவில் இந்த திட்டம் ஒரு பெஸ்ட் நீண்ட கால வேலிடிட்டி திட்டமாக (Long term validity plan) பார்க்கப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள டாக் டைம் (talk time recharge) மற்றும் டேட்டா தீர்ந்துவிட்டால், பிஎஸ்என்எல் வழங்கும் டாப் அப் (BSNL Top-up) மற்றும் டேட்டா வவுச்சர்களை (data vouchers) நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1198 Plan Offers 365 Days Validity Monthly 3GB Data Benefit and 300 Minute Talk Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X