ஏழைக்கு ஏத்த பிஎஸ்என்எல்.. மாதாந்திரம் ரூ.99 போதும்.. ஒரு வருடத்துக்கு வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. எஸ்எம்எஸ்!
ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை என்ற பழமொழிக்கு ஏற்ப கஸ்டமர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப மாதத்துக்கு ரூ.99 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எஸ் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இத்திட்டம் குறித்த விவரம் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் அதிகப்படியாக கிடைப்பதில்லை. இருப்பினும், கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ற சலுகைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை பெறும் கஸ்மர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 12 மாதங்களில் மாதந்தோறும் சலுகைகள் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதாவது, மாதாந்திரம் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 3 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக 30 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த மூன்று சலுகைகளும் மாத கடைசியில் காலாவதியாகிவிடும். அடுத்த மாதத்தில் இருந்து அதே மூன்று சலுகைகள் மீண்டும் கொடுக்கப்படும். இப்படி 12 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைவான சலுகைகள் இருப்பதை போல தோன்றலாம்.
ஆனால், இதற்கான மதாந்திர செலவானது வெறும் ரூ.99ஆக மட்டுமே இருக்கிறது. இவ்வளவு மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், சிம் ஆக்டிவ் சலுகைக்கும் இந்த திட்டம் பயன்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வேண்டுமானால், ரூ.1499 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக மொத்தமாக 24 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகையென்பதால் வேலிடிட்டி நாட்களில் முழுவதும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக டேட்டா வேண்டுமானால், ரூ.1999 திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 600 ஜிபி லம்ப்சம் டேட்டா (Lumpsum Data) சலுகை கிடைக்கிறது.
இது கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுக்கும் அதிகமாகும். இருப்பினும், இந்த திட்டத்தின் டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 600 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா வேகம் குறைக்கப்பட்டுவிடும்.
இருப்பினும், குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் முந்தைய திட்டத்தை போலவே நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இதுபோக கூடுதல் சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஆகவே, லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சந்தாவானது, முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல பிஆர்பிடி (PRBT) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுகிறது. இந்த மூன்று திட்டங்களும் கம்மியான விலையில் அதிகப்படியான சலுகைகளை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








