தூக்கி சாப்பிட்ட BSNL.. ரூ.118-க்கு வருது கூட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 10ஜிபி டேட்டா.. Jio, Airtel முடியல!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களே மூக்கில் விரல் வைக்கும்படியான விலைக்கு அன்லிமிடெட் கால்கள், 10 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், கேமிங் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது மத்திய அரசின் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். வெறும் ரூ.118, ரூ.153 மற்றும் ரூ.199 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டங்களில் நம்ப முடியாத சலுகைகளை களமிறக்கியிருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 118 திட்ட விவரங்கள் (BSNL Rs 118 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், பிஆர்பிடி, ஹார்டி கேம்ஸ், பாட்காஸ்ட் மற்றும் வாவ் எண்டர்டெயின்மெண்ட் போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளையும் கிடைக்கின்றன.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) சலுகை கிடைக்கிறது. இதுபோக 10 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகை வருகிறது.
ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக பிஆர்பிடி (PRBT), ஹர்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podcast) மற்றும் ஜிங்க் மியூசிக் (Zing Music) சலுகை கிடைக்கிறது.
மேலும், வாவ் எண்டர்டெயின்மெண்ட் (Wow Entertainment) சந்தாவும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 20 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 1 நாளுக்கு வெறும் 6 ரூபாய் செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டும் கிடைக்கவில்லை. இதற்கு ரூ.153 மதிப்பிலான திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் சலுகையும் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே கூடுதல் சலுகைகளும் இருக்கின்றன. இந்த திட்டத்துக்கு 26 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்கள் நாள்தோறும் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் முந்தைய திட்டத்தின் மற்ற சலுகைகள் வருகிறது. 26 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை வருகிறது. அதுவும் 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டங்களில் வந்த கூடுதல் சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கொடுக்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். ஆகவே, 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோனில் திட்டங்கள் கிடையாது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை உயர்த்திய பிறகு மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மிகவும் மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் திட்டங்களை வைத்திருப்பது மட்டுமேயாகும்.


Click it and Unblock the Notifications








