ஒரே போடாக போட்ட BSNL.. படுஜோராக 118 ரூபாயில் இந்திய மக்கள் குஷி.. புது பிளானில் என்னென்ன நன்மை இருக்கு?
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நடத்தி வரும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க் தான் இப்போது இந்தியாவின் நம்பகமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக திகழ்கிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் வகையில் பல புதிய திட்டங்களை மலிவு விலையில் வழங்கி மக்களை இப்போது கவர்ந்து வருகிறது. இதில் கவனிக்கவேண்டிய திட்டமாக புதிய திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது.
மக்களை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் இப்போது பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி, இந்தியாவில் இன்னும் பல கோடி மக்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் பக்கம் மாற்றலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் மக்களை ஒரே பிடியாக ஈர்க்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஒரே போடாக போட்ட BSNL.. படுஜோராக 118 ரூபாயில் இந்திய மக்கள் குஷி:

பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan):
இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் என்ற பெயரில் வருகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan) 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் சேவைகளை இலவசமாக பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மையை பற்றி பேசுகையில், இத்திட்டம் 10GB ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா நன்மையை (high speed data) வழங்குகிறது. ஆம், பிஎஸ்என்எல் 4ஜி இப்போது இந்தியாவில் பல இடங்களில் கிடைக்கிறது. BSNL 4G வட்டங்களில் இத்திட்டம் 4G வேகத்தை ஆதரிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதே இந்தியாவில் பல இடங்களில் அதன் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி ஸ்பீட் (BSNL 4G Speed):
பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்கும் இடங்களில் இந்த திட்டம் 4ஜி ஸ்பீட் வேகத்தையும், 4ஜி சேவை இல்லாத இடங்களில் 3ஜி (BSNL 3G) ஸ்பீட் வேகத்தையும் வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வாரி வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் நன்மைகளை காட்டிலும், ஒரு படி மேலே சென்று, 7 வகையான நன்மைகளை இந்த திட்டத்துடன் இலவசமாக வழங்குகிறது.
இதில் ஹார்டி கேம்ட (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), சிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. வெறும் ரூ. 118 விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய நன்மைகளை வழங்கி மக்களை இப்போது கூட்டம் கூட்டமாக ஈர்க்க துவங்கியுள்ளது.
இந்த திட்டம் பட்ஜெட் பிரியர்களை கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டம் என்பதனால், இந்திய மக்களிடையே இந்த திட்டத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








