ரூ.100 விலை பிரிவில் BSNL அதிரடி.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஹேப்பி அண்ணாச்சி.. Jio-வே ஆடிப்போச்சு..
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக மக்களால் அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது ரூ. 100 விலை பிரிவில் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகம் (BSNL plan Rs 100) செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அணைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பிஎஸ்என்எல் நெட்வொர்க் இத்தகைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் அசல் விலை என்ன? இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் மக்களை பெரியளவில் பாதித்தது. குறிப்பாக அடித்தட்டு மக்கள் ரீசார்ஜ் செய்ய அதிக தொகை செலவிட வேண்டியதுள்ளது. இதன் காரணமாக பல கோடி மக்கள் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை தேடி அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் பக்கம் மாறிவிட்டனர்.

ரூ.100 விலை பிரிவில் BSNL அதிரடி.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஹேப்பி அண்ணாச்சி:
இந்தியாவில் உள்ள அணைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் ஒரு நம்பகமான தொலைத்தொடர்பு நிறுவனமாக BSNL தற்போது உருமாறியுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெரும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் 100 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் கிடைக்குமா என்று ஏங்கிய மக்களுக்காக புதிதாக பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan) என்ற ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் என்ற பெயரில் வருகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan) 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் சேவைகளை இலவசமாக பெறுகிறார்கள்.
பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan):
இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா (data) நன்மையை பற்றி பேசுகையில், இத்திட்டம் 10GB ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா (high speed 4G data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 4ஜி வட்டத்தில் 4ஜி ஸ்பீட் வேகத்தை ஆதரிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதே இந்தியாவில் 75,000 புதிய டவர்களை நிறுவி 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்கும் இடங்களில் இந்த திட்டம் 4ஜி ஸ்பீட் வேகத்தை தருகிறது.
4ஜி சேவை இல்லாத இடங்களில் இந்த திட்டம் 3ஜி (BSNL 3G) நெட்வொர்க் ஸ்பீட் வேகத்தையும் வழங்கும். இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வாரி வழங்கியுள்ளது. பொதுவாக ஜியோ நிறுவனம் அதன் பல ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோவின் இலவச நன்மைகளான ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது.
7 வகையான இலவச நன்மை:
இதேபோல், இலவச நன்மைகளை வழங்க பிஎஸ்என்எல் இப்போது ஒரு படி மேலே சென்று, 7 வகையான நன்மைகளை இந்த திட்டத்துடன் இலவசமாக வழங்குகிறது. இதில் ஹார்டி கேம்ட (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), சிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








