Jio பிளானை தூக்கி சாப்பிட்ட BSNL பிளான்.. ரூ.120 கூட இல்லை.. 10GB டேட்டாவுடன் இத்தனை நன்மையா? அடேங்கப்பா..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நடத்தி வரும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க் தான் இப்போது இந்தியாவின் நம்பகமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக பாராட்டப்பட்டு வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் திடீர் விலை ஏற்றம் காரணமாக மக்கள் இப்போது மிகவும் மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும் பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கியுள்ளனர். மக்களை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் இப்போது பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அப்படி, இந்தியாவில் இன்னும் பல கோடி மக்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் பக்கம் மாற்றலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் மக்களை ஒரே பிடியாக ஈர்க்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் மலிவு விலையில் அட்டகாசமான நன்மையை 20 நாட்களுக்கு வழங்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan):
இந்த புதிய திட்டம் பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் என்ற பெயரில் வருகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 118 திட்டம் (BSNL Rs 118 Plan) 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் சேவைகளை இலவசமாக பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மையை பற்றி பேசுகையில், இத்திட்டம் 10GB ஹை-ஸ்பீட் 4ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆம், 4ஜி வேகத்தை ஆதரிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதே இந்தியாவில் பல இடங்களில் அதன் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) கிடைக்கும் இடங்களில் இந்த திட்டம் 4ஜி ஸ்பீட் வேகத்தையும், 4ஜி சேவை இல்லாத இடங்களில் 3ஜி (BSNL 3G) ஸ்பீட் வேகத்தையும் வழங்கும்.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகள் என்ன தெரியுமா?
இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் பல இலவச நன்மைகளையும் வாரி வழங்கியுள்ளது. பொதுவாக ஜியோ நிறுவனம் அதன் பல ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோவின் இலவச நன்மைகளான ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதேபோல், இலவச நன்மைகளை வழங்க பிஎஸ்என்எல் இப்போது ஒரு படி மேலே சென்று, 7 வகையான நன்மைகளை இந்த திட்டத்துடன் இலவசமாக வழங்குகிறது.
இதில் ஹார்டி கேம்ட (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), சிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. வெறும் ரூ. 118 விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய நன்மைகளை வழங்கி மக்களை இப்போது கூட்டம் கூட்டமாக ஈர்க்க துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








