84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி ஆரம்பித்த கையோடு ஜியோவை வம்பிழுக்கும் பிஎஸ்என்எல்.!

|

இந்திய டெலிகாம் துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை சமாளிக்கும் வண்ணம் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது நேற்றுதான் முற்றிலும் புதிய திட்டமான பிபிஎல் 1595 திட்டத்தை அறிவித்தது. சந்தையில் யாருமே வழங்காத 100% வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.

84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; ஜியோவை வம்பிழுக்கும் பிஎஸ்என்எல்.!

இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் தனது புதிய "கூல்" என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதென்ன திட்டம்.? அதன் விலை நிர்யணயம், செல்லுபடியாகும் காலம் மற்றும் நன்மைகள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.

வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு

வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு

இந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.

84 நாட்களுக்கு செல்லுபடி

84 நாட்களுக்கு செல்லுபடி

ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது

டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது

மேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய 'கூல்' வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும்.

நாடு முழுவதிலும் கிடைக்கின்றது

நாடு முழுவதிலும் கிடைக்கின்றது

இந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், தனிப்பட்ட ரிங்கிங் பேக் டோனுக்கான (Personalised Ring Back Tone - PRBT) அணுகலையும் பெறுவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக இந்த "கூல்" வாய்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும், நாடு முழுவதிலும் கிடைக்கின்றது.

குரல் அழைப்புகள் மற்றும் தரவு

குரல் அழைப்புகள் மற்றும் தரவு

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

How to Find a domain easily for your business (TAMIL)
நாடு முழுவதும்

நாடு முழுவதும்

உத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.

எந்தவொரு எல்லையும் கிடையாது

எந்தவொரு எல்லையும் கிடையாது

இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாது.

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை

இரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.

250 எஸ்எம்எஸ்

250 எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

ஏர்டெல் அதிரடி: 4 திட்டங்களில் மீண்டும் திருத்தம்.!

ஏர்டெல் அதிரடி: 4 திட்டங்களில் மீண்டும் திருத்தம்.!

இந்திய டெலிகாம் துறையில் நிகழும் கடுமையான போட்டி காரணமானகவும், அந்த போட்டியில் நிலைத்திருக்கும் முனைப்பிலும் பார்தி ஏர்டெல் மீண்டும் தனது பிரபலமான மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது. திருத்தம் கண்டுள்ள நான்கு மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் ரூ.399/- கட்டணத் திட்டத்தை தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களிலும் முன்பை விட மிகவும் சிறந்த தரவு நன்மைகளை வழங்கும்படி திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதென்ன திட்டங்கள்.? அவைகளின் முந்தைய நன்மைகள் என்ன.? தற்போதைய

வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு

வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு

ஏர்டெல் ரூ.399/- திட்டமானது, அதன் தரவு மற்றும் குரல் அழைப்பு நலன்கள் என இரண்டு வகை நன்மைகளிலுமே திருத்தம் கண்டுள்ளது. இனி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட் ஆனது மொத்தம் 20 ஜிபி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகளையும் வழங்குகிறது.

20 ஜிபி

20 ஜிபி

முதலில் இதே திட்டம் மாதத்திற்கு10 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகளிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள நன்மைகளை வழங்கும்படி மாற்றப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.399/- ஆனது அதன் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி தரவு, வரம்பற்ற உள்வரும், மற்றும் எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகளையும் வழங்கும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, ரூ.399/- ஆனது அமேசான் பிரதம சந்தா போன்ற பிற நன்மைகள், இலவச ஆட்-ஆன்ஸ போன்ற நன்மைகளை வழங்கவில்லை.

90ஜிபி

90ஜிபி

திருத்தம் கண்டுள்ள மற்ற திட்டங்களைப் பற்றி பேசும்போது, ​​ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இப்போது அதன் பில்லிங் சுழற்சியின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.799/- என்கிற கட்டணத் திட்டமானது தற்போது 60ஜிபி தரவும் மற்றும் ரூ.1199/- என்கிற பெரிய பட்ஜெட் திட்டமானது தற்போது 90ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது. இது முன்னர் 75ஜிபி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

300ஜிபி

300ஜிபி

திருத்தங்கள் தவிர்த்து, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,599/- என்கிற பிரீமியம் திட்டமானது அதன் பில்லிங் சுழற்சியில் 150 ஜிபி தரவு கொடுக்கிறது மற்றும் ரூ.1,999/- ஆனது 200ஜிபு தரவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.2,999/- என்கிற திட்டமானது ஒரு நம்பமுடியாத 300ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா

வோடபோன் மற்றும் ஐடியா

செல்லுலார் திருத்தங்கள் பெற்றதின் விளைவாக தொலைதொடர்புத் துறையிலுள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட சிறந்த தரவு நன்மைகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. இருப்பினும் விரைவில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவைகளையும் ஏர்டெல் உடன் பொருந்துமாறு தங்கள் பட்ஜெட் திட்டங்களை மாற்றியமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இலவச அமேசான் ப்ரைம் சந்தா

இலவச அமேசான் ப்ரைம் சந்தா

இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச அமேசான் ப்ரைம் சந்தா (முன்னர் குறிப்பிட்டபடி ரூ.399 திட்டம் தவிர), இலவச ஆட் ஆன்ஸ் (ரூ.799/- திட்டம் மற்றும் அதற்கு மேலான திட்டங்களில்) ஆகியவற்றையும் வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1099 prepaid plan offers unlimited data with no daily FUP limit, voice calls for 84 days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X