குளிர்ச்சியான சேதி சொன்ன BSNL.. 60 நாளுக்கு ஜமாய்க்க புது 108 திட்டம்.. மொத்த இந்தியாவும் ஹேப்பி அண்ணாச்சி..
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குளிர்ச்சியான செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. வெறும் 108 ரூபாய் விலையில் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் (BSNL 108 Plan with 60 Days Validity) ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு வாய்ஸ் கால்ஸ் நன்மை, டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை என்று அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. இந்த புதிய திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் மற்றும் முழு விபரங்கள் இதோ.
இந்த 2025 ஆம் ஆண்டில் அதிக செலவில்லாமல், குறைந்த விலையில் ஒரு சிறப்பான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பிஎஸ்என்எல் உங்களுக்காகவே ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை தொகுத்து வழங்க துவங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து BSNL வட்டங்களிலும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. 100 ரூபாய் விலை ரேஞ்சில் 60 நாள் வேலிடிட்டி நன்மையை இதுவரை யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த திட்டம் பிஎஸ்என்எல் 3ஜி நெட்வொர்க் சேவை (BSNL 3G network service) கிடைக்கும் இடத்தில் 3ஜி டேட்டா ஸ்பீட் (3G data speed benefits) நன்மையையும், அதேபோல், பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவை (BSNL 4G network service) கிடைக்கும் இடங்களில் 4ஜி டேட்டா ஸ்பீட் (4G data speed benefits) வேகத்தையும் வெறும் 108 ரூபாய் விலையில் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
சரி, பிஎஸ்என்எல் வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டமான பிஎஸ்என்எல் ரூ. 108 திட்டம் (BSNL Rs 108 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று தெளிவாக பார்க்கலாம். இந்த புதிய BSNL 108 Plan, அதன் பயனர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 60 days validity plan) வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை (unlimited voice calls benefits) வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 108 திட்டம் (BSNL Rs 108 Plan):
அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் இலவசம் என்பதனால், எந்த வரையறையும் இல்லாமல், உங்கள் விருப்பமானவர்களுடன் நீங்கள் தாராளமாக வாய்ஸ் காலில் இணைந்திருக்கலாம். இந்த திட்டம் உங்களுக்கு தினசரி 1GB டேட்டா (BSNL 1GB daily data) நன்மையை வழங்குகிறது. 1GB தான் டேட்டாவா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். 108 ரூபாய் விலையில் உங்களுக்கு 60 நாட்களுக்கு 1GB டேட்டா கிடைக்கிறது என்று யோசித்து பாருங்கள். இது சற்று நியாயமானதாக தோன்றும்.
தினசரி 1GB என்று வைத்துக்கொண்டால், இந்த திட்டம் 60 நாட்களில் மொத்தமாக 60GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்திய டெலிகாம் துறையில், மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த நன்மையாக இது பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (100 SMS per day) நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் பட்ஜெட் பிரியர்கள், மாணவர்கள், சிறுதொழில் செய்யும் வியாபாரிகள் என்று அனைவரின் தேவையும் குறைந்த விலையில் நிறைவேற்று ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications








