பிஎஸ்என்எல் போட்டப்போடு.. வெறும் ரூ.107 போதும்.. 35 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா சலுகை!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தினசரி டேட்டா (Daily Data) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) சலுகைகளை கொடுக்கிறது. வெறும் ரூ.107 விலையில் 35 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ள முடியும். இந்த விலையில் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) இருக்கின்றன. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் 4ஜி சேவைகளை விரைவில் தொடங்க இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், இன்றளவும் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலையிலேயே திட்டங்களை தொடர்ந்து வருகிறது. இது 4ஜி சேவைக்கு பின்பு மாற வாய்ப்பில்லை என்றும் டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களையும் கவர்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 108 திட்ட விவரங்கள் (BSNL Rs 108 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, இவ்வளவு மலிவான விலைக்கு கிடைத்தும் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
ஆகவே, 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் வாய்ஸ் கால் (National Voice Call) சலுகையும் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆனால், மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட கம்மியாக விலை நிர்ணயம் இருக்கிறது.
அதாவது, லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசாவும், நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 1.20 ரூபாயும் கட்டணமாக இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, எந்தவொரு டெலிகாம் நிறுவனம் வழங்க முடியாத விலையில் இந்த திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது. இதேபோல ரூ 107 மதிப்பில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 107 திட்ட விவரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அதற்கேற்ப சலுகைகளில் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அதாவது, இதில் தினசரி டேட்டா சலுகை கிடையாது. ஆனால், 3 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
அதேபோல வாய்ஸ் கால் சலுகையிலும் அன்லிமிடெட் கொடுக்கப்படவில்லை. 200 நிமிடங்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) சலுகை வருகிறது. இந்த திட்டத்திலும் எஸ்எம்எஸ் சலுகை கிடையாது. 35 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தை விட 7 நாட்கள் அதிகமாகும்.
இதேபோல ரூ.100 பட்ஜெட்டில் திட்டத்தை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. ரூ.99 விலையில் சலுகைகளை கொடுக்கிறது. இதில் 200 எம்பி டேட்டா, ரூ.99 லிமிடெட் வேலிடிட்டி டாக்டைம் கிடைக்கிறது. இந்த டாக்டைம் மூலம் வாய்ஸ் கால்களை செய்தால், நொடிக்கு 2.5 வசூலிக்கப்படும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 15 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் மட்டுமே மலிவான விலையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், மற்ற நிறுவனங்கள் 4ஜி வேகத்தில் சலுகைகளை கொடுக்கின்றன. பிஎஸ்என்எல் 4ஜி வேகத்தில் சில பகுதிகளில் மட்டுமே சேவைகளை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications