அடேங்கப்பா: பிஎஸ்என்எல் ரூ.108 திட்டம்: வரம்பற்ற குரல் அழைப்புகள்: 1ஜிபி டேட்டா.!

|

ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய சில நாட்களில், பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது புதிய ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உண்மையில், பி.எஸ்.என்.எல் ஏற்கனவே இந்த திட்டத்தைத் தனது சென்னை இணையதளத்தில் சலுகை விளம்பர பட்டியலிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவிற்கு போட்டியாக புதிய திட்டம்

ஜியோவிற்கு போட்டியாக புதிய திட்டம்

இந்த திட்டம் 90 நாட்களுக்கு முன்பே டெல்கோ விளம்பரப் படுத்தி, ஜூலை மாதம் துவங்கியது. இந்த ஆண்டின் டிசம்பர் 12, 2019 வரை இந்த திட்டத்தை வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது என்று கேஜெட்ஸ் 360 தெரிவித்துள்ளது.

 ரூ.108 திட்டம்

ரூ.108 திட்டம்

இந்த புதிய ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை, நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ், மற்றும் 1 ஜிபிடேட்டா என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சேவை டெல்லி மற்றும் மும்பையில் போன்ற நகரங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.!அமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.!

 ரூ.1,188 மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1,188 மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

தற்பொழுது இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்துடன் பிஎஸ்என்எல் வழங்கிவரும் ரூ.1,188 மதுரம் ப்ரீபெய்ட் திட்டத்தின் காலத்தை ஜனவரி 2020 வரை நீடித்துள்ளது.

ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்! ஜியோ vs ஏர்டெல்!ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்! ஜியோ vs ஏர்டெல்!

5ஜிபி டேட்டா

5ஜிபி டேட்டா

மதுரம் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.1,188 கீழ், பயனர்களுக்குத் தினமும் 5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும், குரல் அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படுகின்றன, அதன் பிறகு, பயனர்கள் அழைப்புகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், கூடுதலாக மொத்த காலத்திற்கும் 1200 மெசேஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs.108 Plan: Unlimited Voice Calls And 1 GB Data Daily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X