Home
News

தினமும் 2ஜிபி டேட்டா.. 45 நாள் வேலிடிட்டி.. மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL..

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதுவும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே விரைவில் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகள் கொடுத்துள்ளது.

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL..

அதாவது பிஎஸ்என்எல் ரூ.108 மற்றும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அதிக சலுகைகளை வழங்குகிறது. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 108 FRC)ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். பின்பு இந்த திட்டத்தில் உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு 80 பைசா மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்க்கு 1.20 பைசா வசூல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 FRC) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் இந்த திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

நீங்கள் சில்லறை விற்பனையாளரிடமிருந்தோ அல்லது ஆன்லைனில் புதிய BSNL சிம்மை வாங்கினால் இந்த ரூ.108 மற்றும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களைத் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் தினமும்2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகல், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதிக டேட்டா நன்மையை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 108 and Rs 249 FRCs Plans Offers and Benefits: check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X