BSNL ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: 50 நாட்கள் வேலிடிட்டி! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டுவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

குறைந்த விலை ரீசார்ஜ்
அதன்படி பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் அதிக வேலிடிட்டி உடன் அருமையான சலுகைகளையும் வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் முழு நன்மைகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 200 நிமிடங்கள் இலவச அழைப்பு நன்மைகள் உள்ளது. இதுதவிர 3ஜிபி டேட்டா, 50 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் அணுகலும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்.
அழைப்பு நன்மைகள் மட்டுமே போதும் என்றும் விரும்பும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். குறிப்பாக அதிக நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஸ்என்எல் சிறந்த
சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் ஆனதுதினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் மற்றொரு முக்கிய நன்மையும் உள்ளது. அதாவதுபிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் பிரீமியம் கேம்களுக்கான அணுகலைப் பெறமுடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது Onmobile Global Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் பயனர்களுக்கான இந்தத்திட்டத்துடன் Progressive Web App (PWA) இல் அரினா மொபைல் கேமிங் சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி,பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.
மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பெறலாம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 என்று அழைக்கப்படும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.
இதுதவிர Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்தஅசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில்தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மைமுடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆகக் குறைகிறது.


Click it and Unblock the Notifications