Home
News

சத்தமில்லாமல் மலிவு விலை திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்த BSNL.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் பல்வேறு நகரங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையைக் குறைத்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 107 Prepaid Plan) ஆனது முன்பு 35 நாட்கள் வேலிபடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல்  மலிவு விலை திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்த BSNL..

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். அதேபோல் 200 நிமிட இலவச குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs. 107 prepaid plan validity has been reduced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X