சைலெண்ட்டா முடிச்ச பிஎஸ்என்எல்.. இனிமே 28 நாட்கள் இல்ல.. 22 நாட்கள்.. அடிமட்ட திட்டத்தில் கைவைப்பு!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை போலவே இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை குறைக்க தொடங்கி இருக்கிறது. அடிமட்ட விலைக்கு கிடைத்துவந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் மற்ற நிறுவனங்களைவிட மலிவாக கிடைத்தாலும், வேலிடிட்டி குறைக்கப்பட்டிருப்பது கஸ்டமர்கள் ஷாக்காகி இருக்கின்றனர்.
அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைத்த பிறகு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், இதில் தனியார் நிறுவனங்களின் திட்டங்களே பெரும்பாலும், மாற்றங்களை கண்டன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், மலிவான விலைக்கு தொடர்ந்து திட்டங்களை கொடுத்துவந்தது. இப்போது, இது அடியோடு மாற தொடங்கி இருக்கிறது.

ஏனென்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் அதனுடைய 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கிவிட்டது. பெரும்பாலான சர்க்கிள்களில் 4ஜி சேவைகள் கிடைக்கின்றன. இதனால், அந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிடைத்துவந்த சலுகைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வேலிடிட்டி குறைக்கப்படுகிறது.
அந்த வரிசையில், இப்போது பெரும்பாலான கஸ்டமர்களுக்கு பிடித்த திட்டமாக இருந்த பிஎஸ்என்எல் ரூ 107 திட்டத்தின் (BSNL Rs 107 Plan) வேலிடிட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. பிறகு 30 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் 28 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டது.
இறுதியாக இப்போது, 22 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேலிடிட்டியை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லையே என்று தோன்றுகிறது. ஆனால், முன்னதாக கொடுக்கப்பட்ட 35 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒப்பிடுகையில் குறைவாக தோன்றுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைப்பதால், இந்த வேலிடிட்டி குறைப்பு நடப்பது தெரிகிறது.
பிஎஸ்என்எல் ரூ 107 திட்ட விவரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்காது. ஏனென்றால், அடிமட்ட விலைக்கு கொடுக்கப்படுகிறது. 200 நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். டேட்டாவும் கிடைக்கிறது.
ஆனால், லம்ப்-சம் சலுகையில் டேட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 3 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இதுபோன்ற மலிவு விலை திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா கிடைக்காது. ஆனால், இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கும். முன்பே சொன்னதை போல இதற்கு 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. ஏற்கனவே, ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி தொடர்ந்து கிடைக்கலாம். ஆனால், இனிமேல் ரீசார்ஜ் செய்தால் 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது.
இதேபோல தினசரி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால் ரூ.153 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் தினசரிக்கு கொடுக்கப்படும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. 24 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தைவிட கொஞ்சம் விலை அதிகம்தான். ஆனால், சலுகைகளும் அதிகம்.


Click it and Unblock the Notifications








