Home
News

இது புதுசா இருக்குண்ணே.. BSNL-ன் ரூ.107 ரீசார்ஜ்.. எவ்ளோ நாள் வேலிடிட்டினு சொன்னா நம்புவீங்களா?

பிஎஸ்என்எல் (BSNL) என்கிற இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது, அதன் பயனர்களுக்கு ரூ.107 மதிப்பிலான 'பிளான் வவுச்சர்' (plan voucher) ஒன்றை வழங்குகிறது. இத்தகைய வவுச்சர்கள் மூலம், பயனர்கள் தங்கள் சிம் (SIM) கார்டை செயலில் வைத்திருப்பதோடு, பல்வேறு சலுகைகளையும் பெற முடியும்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக இது போன்ற திட்டங்களை வழங்குவதில்லை என்பதும், இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த கட்டணத்தில் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே பிஎஸ்என்எல் இத்திட்டத்தை வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

BSNL-ன் ரூ.107 ரீசார்ஜ்.. எவ்ளோ நாள் வேலிடிட்டினு சொன்னா நம்புவீங்களா?

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இத்திட்டம் 20 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 3ஜிபி அதிவேக டேட்டா (high-speed data) வழங்கப்படுகிறது. இந்த வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும், இதில் 200 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால் (voice calling) நன்மையும் கிடைக்கிறது. மேலும் இத்திட்டம் இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (telecom circles) ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்ய, ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS பயனர்களுக்கு அணுக கிடைக்கும் பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL Self-Care) மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம்.

மேலும் இத்திட்டம் எம்என்டிஎல் (MTNL) நெட்வொர்க்கிலும் செயல்படும். தெரியாதவர்களுக்காக நீண்ட காலமாக எம்என்டிஎல்-இன் மொபைல் சேவைகளை பிஎஸ்என்எல் தான் நிர்வகித்து வருகிறது. இதில் வெளிப்படையான பிராண்டிங் (branding) எம்என்டிஎல் ஆக இருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பக் குழு ஆகியவை பிஎஸ்என்எல்-ஐ சார்ந்தவைகள் ஆகும்

மேலும் ரூ.107 ஆனது ஒரு 'பிளான் வவுச்சர்' ஆகும். வாய்ஸ் கால் மற்றும் மொபைல் டேட்டா வசதிகளுடன் கூடிய மிக குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், தேவைப்பட்டால் போர்ட்-அவுட் எஸ்எம்எஸ் (PORT-out SMS) ஒன்றை அனுப்ப உங்கள் டாக்-டைம் (talktime) பேலன்ஸை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலச் சலுகையாக கிடைக்கும் பிஎஸ்என்எல்-ன் ரூ.51 திட்டம்: எக்ஸ் (X) தளத்தில் பதிவிடப்பட்ட தகவலில், ரூ.51 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Rs.51 Prepaid Plan) மூலம் ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் பயனர்களை கேட்டு கொண்டுள்ளது.

இத்திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு பிஎஸ்என்எல் பயனராக இருந்தால், மறுபடியும் ஒரு புதிய சிம் கார்டுடன் இத்திட்டத்தை தனியாக வாங்க வேண்டியிருக்கும். பிஎஸ்என்எல்-இன் இந்த ரூ.51 சலுகையின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:

- இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டு
- வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited voice calling)
- தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB data)
- தினமும் 100 எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS)
- 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity)

முன்னரே குறிப்பிட்டபடி இத்திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனருக்கு புதிய இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் வழங்கப்படும். இச்சலுகை ஆகஸ்ட் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும். இச்சலுகையை பெற விரும்பினால், அருகிலுள்ள பிஎஸ்என்எல் கிளை அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களை அணுகலாம்.

பிஎஸ்என்எல்-இன் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரிடமி இருந்தும் சிம் கார்டுடன் இந்த சலுகையைப் பெற முடியும். இச்சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றாலும், வழக்கம்போல பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது இந்த சலுகையை இன்னும் சில நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 107 Plan With 3GB Data 20 Days Validity Great Value Recharge for Keep Your SIM Active in Budget
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X