மினிமமே இதுதாங்க.. BSNL ஏழைக்கு ஏத்தது.. வெறும் ரூ.107 போதும்.. 35 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ் திட்டங்கள் கிட்டத்தட்ட ரூ.200 செலவில் கிடைக்கிறது. அதிகபட்சம் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், மறுபக்கம் மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வெறும் ரூ.107 கட்டணத்தில் 35 நாட்களுக்கு சலுகைகளை கொடுத்து மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த மலிவு விலை மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் (Cheapest Monthly Prepaid Plan) விவரம் இதோ.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மலிவு விலை திட்டங்களின் விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் எந்தவொரு கட்டணத்தையும் உயர்த்தவில்லை. அதேநேரத்தில் 4ஜி சேவைகளுக்கான பணிகளில் மும்முரம் காட்டுகிறது.

இதனால், இப்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் பிஎஸ்என்எல் திட்டங்களின் மீதான பார்வை மாறி இருக்கிறது. 4ஜி சேவைகள் வந்துவிட்டால், பிஎஸ்என்எல் மட்டுமே மலிவான விலை திட்டங்களை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும். இப்போது, மலிவு விலை மாதாந்திர திட்டத்தை பற்றி பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 107 திட்ட விரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் மற்ற நிறுவனங்களைவிட டேட்டா வேகத்தில் மட்டுமே குறைவாக இருக்கிறது. ஆனால், மொத்த சலுகையில் லாபம் தரக்கூடிய திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு முழுதாக 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இது மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத வேலிடிட்டி சலுகையாகும். பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இந்த விலைக்கு சலுகைகள் பெறுவது நம்ப முடியாதவையாக இருக்கலாம். இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே. தினசரிக்கு பயன்படுத்த முடியாது. அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகளும் இதில் கிடையாது.
ஆனால், 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் தேவைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 35 நாட்களுக்கு மலிவான சலுகைகளுடன் சிம் ஆக்டிவ் வேலிடிட்டியும் வருவதால், இந்த திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல மாதம் ரூ.100 செலவில் வருடம் முழுவதும் சலுகைகள் வேண்டுமானால், ரூ.1198 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம்.
பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த வருடாந்திர பிஎஸ்என்எல் திட்டத்தில் 12 மாதங்களுக்கான சலுகைகள் மாதமாதம் பிரித்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களுக்கான லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கின்றன. மேலும், 3 ஜிபிக்கான டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
இது தினசரி டேட்டா கிடையாது. ஒரு மாதத்துக்கு 3 ஜிபி டேட்டா என்னும் கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளும் வருகிறது. அதாவது, மாதத்துக்கு 30 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை 12 மாதங்கள் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த சலுகைகள் மிகவும் குறைவாக இருக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால், இந்த திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.99 மட்டுமே செலவாகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும் நல்ல லாபம் மற்றும் வருடம் முழுவதும் உங்களது பிஎஸ்என்எஸ் சிம் கார்டை தொடர்ந்து ஆக்டிவில் வைத்திருக்க முடியும். மற்ற நிறுவனங்களில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் வைத்திருக்க இந்த விலையில் திட்டம் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








