அவ்ளோதான் சோலி முடிஞ்சு.. ரூ.107-க்கு 35 நாட்களை இறக்கிய BSNL.. வாய்ஸ் கால்கள்.. 3ஜிபி டேட்டா.. யூசர்கள் குஷி!
அடிமட்ட ரேட்டுனா, அது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம்தாங்க என்று அடித்து சொல்லும் அளவுக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) வைத்திருக்கிறது அந்த நிறுவனம். நாளுக்கு நாள் கஸ்டமர்களை தட்டித்தூக்கி வருவது மட்டுமல்லாமல், மலிவான விலையில் அதிக வேலிடிட்டியை கொடுத்து ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்து வருகிறது. அப்படி, ஆரம்ப திட்டமே வெறும் ரூ.107-க்கு கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு 35 நாட்கள் வேலிடிட்டியை இறக்கியிருக்கிறது.
ரீசார்ஜ் விலை உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல்லில் மட்டுமே அடிமட்ட விலைக்கு திட்டங்கள் வருவதாக கஸ்டமர்கள் நினைக்கின்றனர். இதற்கேற்ப பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் வைத்திருப்பதையும் மறுக்க முடியாது. சொல்லப்போனால், மற்ற நிறுவனங்களில் ஆரம்ப விலை திட்டம் ரூ.180-க்கும் மேல் தொடங்குகிறது. ஆனால், பிஎஸ்என்எல் ரூ.107-க்கு கிடைக்கிறது.

இந்த விலைக்கு மற்ற நிறுவனங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேலிடிட்டியும் கிடைக்கிறது. இப்படி ரூ.107 முதல் ரூ.199 வரையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம். ரூ.500-க்கும் கீழ் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள் இதுவாகும். புதிய கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், பழைய கஸ்டமர்களும் இதன் மூலம் லாபமான திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியும்.
பிஎஸ்என்எல் ரூ 107 திட்ட விவரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 35 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட விலைக்கு சிம் கார்டு ஆக்டிவ் (SIM Card Active) அதிக நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
இந்த டேட்டா லம்ப்-சம் சலுகையாகும். ஆகவே, 3 ஜிபிக்கு பிறகு எந்த டேட்டாவும் கிடையாது. அதேபோல லிமிட் இல்லாமல், வேலிடிட்டி நாட்களில் எப்போதும் பயன்படுத்தலாம். 200 நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்களை (National Voice Calls) செய்து கொள்ளலாம். ஒருவேளை அதிகப்படியான டேட்டா தேவைப்பட்டால் பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 153 திட்ட விவரங்கள் (BSNL Rs 153 Plan Details): இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமல்லாமல், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 26 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு 26 நாட்கள் வேலிட்டி கிடைக்கிறது. மேலும், பிஎஸ்என்எல் டியூன்ஸ், அரினா கேம்ஸ், ஹார்டி கேம்ஸ், ஜிங்க் மியூசிக் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 199 திட்ட விவரங்கள் (BSNL Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், முந்தைய திட்டங்களைவிட கூடுதலான டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 60 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதுபோக 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் வேலிடிட்டி நாட்களில் பயன்படுத்தலாம். வழக்கமாக கிடைக்கும், லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்கள் அன்லிமிட்டாக வழங்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கிறது. இதுபோக கூடுதல் சலுகைகளும் வருகின்றன.
அதாவது, ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலன்ஜர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேமியம் (Gameium), ஜிங்க் மியூசிக் (Zing Music) போன்ற சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.500-க்கு கீழ் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தாராளமாக இந்த திட்டங்களில் ஒன்றை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








