Home
News

இறங்கி அடித்த BSNL.. வெறும் ரூ.107 போதும்.. இனிமே 35 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் இனிமேல் காலரை தூக்கிவிட்டு கொண்டு செல்லலாம் போல, அப்படியான ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) இப்போது கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொடுக்கிறது. வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகையை அடிமட்ட விலைக்கு வழங்கப்படுகிறது. இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்கள் இதோ.

ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்வதில் எந்த டெலிகாம் நிறுவனத்தில் கம்மியாக காசு செலவாகிறதோ அந்த சிம் கார்டை வாங்கி பயன்படுத்தும் வழக்கத்துக்கு கஸ்டமர்கள் வந்துவிட்டனர். இதனாலேயே பிஎஸ்என்எல் சிம் கார்டை செகண்டரியாக பயன்படுத்துகின்றனர். டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்த பிறகு ஒவ்வொரு திட்டத்திலும் பிஎஸ்என்எல் பட்டையை கிளப்பி இருப்பது தெரிகிறது.

இறங்கி அடித்த BSNL.. வெறும் ரூ.107 போதும்.. இனிமே 35 நாட்கள் சேவை!

பிஎஸ்என்எல் ரூ 107 திட்டம் மலிவான ரீசார்ஜ் (BSNL Rs 107 Plan Cheapest Recharge): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் சிம் ஆக்டிவ் மலிவான விலைக்கு கிடைக்கும். ஆகவே, சலுகைகளை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. அதாவது, 35 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்காது. 200 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

இது லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ்களுக்கு (Roaming Voice) பொருந்தும் சலுகையாகும். இதுபோக டேட்டா சலுகையும் இருக்கிறது. ஆனால், லம்ப்-சம் முறையில் 3 ஜிபி டேட்டாவாக கிடைக்கிறது. 35 நாட்களுக்கும் இந்த 3 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இதற்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்காது. ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு கட்டணம் இருக்கும்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. ஆகவே, ஒரு மாதத்துக்கும் மேலாக உங்களுக்கு வேலிடிட்டி மற்றும் சிம் ஆக்டிவ் வேண்டும். ஆகவே, சலுகைகள் குறைவாக இருந்தால் கூட பிரச்சனையில்லை என்று கேட்டால், இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி டேட்டாவுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் எதிர்பார்க்கும்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. இப்போது, இந்த திட்டத்தின் விவரங்களை பார்ப்போம். ரூ 199 விலைக்கு இந்த பிஎஸ்என்எல் திட்டம் கிடைக்கிறது. இதை ரீசார்ஜ் செய்த பிறகு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ஒரு மாதம் முழுவதும் முந்தைய திட்டத்தை போல லிமிட் இல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்ய முடியும். அதேபோல டேட்டாவும் தினசரிக்கு கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த போஸ்ட் டேட்டா 2 ஜிபிக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும்.

முந்தைய திட்டத்தில் எஸ்எம்எஸ் கிடையாது, ஆனால், இந்த திட்டத்தில் இருக்கிறது. ஆகவே, டேட்டாவை போல ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம். ஒரு மாத வேலிடிட்டியில் சிம் ஆக்டிவ் மற்றும் தினசரி டேட்டா கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் உங்களுக்கான திட்டங்களை நீங்களே தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவருகிறது. இருப்பினும், பழைய விலையிலேயே திட்டங்களை வைத்திருக்கிறது. ஆகவே, நாடு முழுவதும் 4ஜி சேவைகள் வந்துவிட்டால், அடிமட்ட விலையில் பிஎஸ்என்எல் மட்டுமே திட்டங்களை வைத்திருக்கும் நிறுவனமாக இருக்கும். இதனாலேயே சிம் கார்டு விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 107 Plan Offer 35 Days Validity 3GB Data Limited Voice Calls Check Cheapest Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X