Home
News

BSNL கொடுத்த ரூ.107 திட்டம்.. மொத்த இந்தியாவும் ஹேப்பி.. இதோட நன்மை இருக்கே.. கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும்

'ஹா ஹா ஹா.. இது டம்மி பீஸ் பாவா' என்று பிஎஸ்என்எல் மூஞ்சிக்கு நேராக கலாய்த்தவர்கள் கூட, இப்போது கமுக்கமாக புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு ஒன்றை வாங்கி, அவர்களின் போனில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், இந்தியாவில் மதிக்கப்படாமல் இருந்த ஒரு நெட்வொர்க் என்றால் அது அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தான். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

இப்போது இந்திய மக்கள் விரும்பும் நெட்வொர்க்காக BSNL மாறியுள்ளது. தற்போது மக்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நம்பி அதன் பக்கம் மாறுவதற்கு காரணமாக இருப்பதும் தனியார் நிறுவனங்கள் தான் என்றால் அது மிகையாகாது. தெரிந்தோ, தெரியாமலோ தனியார் நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்ததினால், கடுப்பான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சத்தமில்லாமல் மாறத்துவங்கியுள்ளனர்.

BSNL கொடுத்த ரூ.107 திட்டம்.. மொத்த இந்தியாவும் ஹேப்பி..

பிஎஸ்என்எல் ரூ. 107 திட்டம் (BSNL Rs 107 Plan):

இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒரே மாதத்தில் சுமார் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) வாங்கியுள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள், தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். காரணம், இப்போது இந்தியாவில் BSNL நிறுவனம் மட்டும் தான் மிகவும் மலிவு விலை திட்டங்களை வழங்குகிறது.

அதுமட்டுமின்றி, பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் அதன் 4ஜி (BSNL 4G) சேவையை துவங்கிவிட்டது. இதனால் மக்கள் கூட்டம் இப்போது பிஎஸ்என்எல் பக்கம் அதிகமாகியுள்ளது. இதற்கு நடுவே மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் மலிவு விலையில் பலதரப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 107 விலையில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் நீங்கள் ஒரு மலிவு விலை திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த பிஎஸ்என்எல் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 107 Prepaid Plan) தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் முதல் அட்டகாச நன்மையே இது 35 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது தினசரி டேட்டா நன்மையுடன் வருவதில்லை.

பிஎஸ்என்எல் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 107 Prepaid Plan):

மாறாக இது மொத்தமாக 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறைந்த டேட்டா பயனர்களுக்கு இது போதுமானது. டேட்டா போதியாக இல்லை என்றால், நீங்கள் BSNL இன் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் 200 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் வருகிறது என்றாலும், இது 200 நிமிட வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் வருகிறது.

ஆனால், இந்த திட்டம் 35 நாட்களுக்கு இன்கமிங் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. இது சிலருக்கு பொதியதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 107 Plan Is The New Best Recharge Plan In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X