BSNL: ரூ.100-க்குள் ரீசார்ஜ் வேண்டுமா? தம்பி Jio, Airtel, Vi ஓரம்போ.. அண்ணன் BSNL 50 நாளுக்கு பிளான் தரேன்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது 107 ரூபாய்க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 100 ரூபாய்க்குள் எளிமையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் கேட்ட மக்களின் கவலையை போக்கும் விதமாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல் ரூ. 107 பிளான் (BSNL Rs 107 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, மக்கள் விலை மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தேடி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வாழ்கை இதனால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான விலை காரணமாக மக்கள் இப்போது ரீசார்ஜ் செய்ய திக்குமுக்காடுகிறார்கள்.

பிஎஸ்என்எல் ரூ. 107 பிளான் (BSNL Rs 107 Plan):
இவர்களின் கவலையை போக்கும் விதத்தில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் இப்போது 100 ரூபாய் விலை புள்ளியில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Prepaid plans under Rs 100) வழங்க துவங்கியுள்ளது. வெறும் 100 ரூபாய்க்குள் ப்ரீபெய்ட் திட்டத்தை எதிர்பார்த்த மக்களுக்காகவே BSNL இப்போது 107 ரூபாயில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 107 திட்டம் (BSNL Rs 107 Plan) 50 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையோடு வருகிறது. இந்த திட்டம் 200 நிமிட டாக் டைம் (talk time) நேரத்தை வழங்குகிறது. ஆம், இந்த திட்டம் 200 நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் டாக் டைமை மட்டுமே வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் மற்ற திட்டங்கள் போல இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை கிடைப்பதில்லை. கூடுதல் வாய்ஸ் நன்மைக்கு பிஎஸ்என்எல் டாப் அப் (BSNL top up) செய்துகொள்ளலாம்.
தம்பி Jio, Airtel, Vi ஓரம்போ.. அண்ணன் BSNL ரூ.100 ரேஞ்சில் 50 நாளுக்கு பிளான் தரேன்:
இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி டேட்டா நன்மையையும் வழங்கவில்லை. இதற்கு மாறாக, இந்த திட்டத்துடன் BSNL நிறுவனம் 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த டேட்டா 3ஜி (3G) மற்றும் 4ஜி வேகத்தில் (4G) பயன்படுத்த கிடைக்கிறது. இது தவிர இந்த திட்டத்தில் வேறு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்த்தால், 50 நாட்களுக்கு இன்கம்மிங் சேவை மற்றும் SIM செயல்பாட்டு நன்மை கிடைக்கிறது.
ஆம், இது மிகவும் மலிவான ஒரு அடிப்படை திட்டம் என்பதனால், இதில் 50 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (50 days validity) வழங்கப்பட்டுள்ளது. இந்த செல்லுபடியாகும் காலத்தில், மக்கள் இன்கமிங் அழைப்புகளை (free incoming calls benefit) எந்தவித தடையுமின்றி பெறுவார்கள், இதன் மூலம் அவர்களால் கூடுதல் செலவின்றி மற்றவர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். இது தவிர இந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிஎஸ்என்எல் சிம் கார்டு ஆக்டிவ் (BSNL SIM card) நிலையில் வைக்கப்படும்.
பிஎஸ்என்எல் ரூ. 108 திட்டம் (BSNL Rs 108 Plan):
இந்த நன்மைகள் போதாது என்பவர்களுக்காக, பிஎஸ்என்எல் 1 ரூபாய் வித்தியாசத்தில் மற்றொரு திட்டத்தை வழங்குகிறது. அது தான் பிஎஸ்என்எல் ரூ. 108 திட்டம் (BSNL Rs 108 Plan). இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை, தினசரி 1GB டேட்டா நன்மை (daily 1GB data) மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் (daily 100 SMS) நன்மை ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications