Home
News

BSNL சிம் இருக்கா? அடுச்சது டபுள் சந்தோஷம்.. இந்த 2 பிளானுக்காகவே குடும்பம் குடும்பமா BSNL-க்கு மாறுறாங்க..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மட்டுமே இந்தியாவில் இப்போது வரை பிஎஸ்என்எல் 2ஜி (BSNL 2G) மற்றும் பிஎஸ்என்எல் 3ஜி (BSNL 3G) சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் 2ஜி (BSNL 2G) வேகமாக இருந்தாலும் சரி, 3ஜி (BSNL 3G) வேகமாக இருந்தாலும் சரி, ரீசார்ஜ் மலிவு விலையில் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் மக்கள் இப்போது BSNL நோக்கி கூட்டம் கூட்டமாகவும், குடும்பம் குடும்பமாகவும் படையெடுக்க துவங்கியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல சுவாரசியமான திட்டங்களை வழங்கி வருகிறது.

இதில் மிகவும் சுவாரசியமான திட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு திட்டம் ரூ. 107 விலையிலும் மற்றொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ. 153 விலையிலும் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையில் ஏறக்குறைய 46 ரூபாய் விலை வித்தியாசம் என்றாலும், இதன் நன்மைகள் வெவ்வேறு லெவலில் வித்தியாசமான நன்மைகளை வழங்குகிறது.

BSNL சிம் இருக்கா? அடுச்சது டபுள் சந்தோஷம்.. குடும்பமா BSNL-க்கு வருகை

BSNL சிம் இருக்கா? அடுச்சது டபுள் சந்தோஷம்.. இந்த 2 பிளானை உடனே பாருங்க:

இப்போது இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனமாக மாறிவிட்டது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது மிகவும் மலிவு விலையில் பல புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களும் சலிக்காமல் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் பிஎஸ்என்எல் அவர்களை விட குறைத்த விலையில் மக்களை ஈர்க்க துவங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 107 Prepaid Plan):

இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் நீங்கள் ஒரு மலிவு விலை திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த பிஎஸ்என்எல் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 107 Prepaid Plan) தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தின் முதல் அட்டகாச நன்மையே இது 35 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது தினசரி டேட்டா நன்மையுடன் வருவதில்லை.

மாறாக இது மொத்தமாக 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறைந்த டேட்டா பயனர்களுக்கு இது போதுமானது. டேட்டா போதியாக இல்லை என்றால், நீங்கள் BSNL இன் டேட்டா வவுச்சர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் 200 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் வருகிறது என்றாலும், இது 200 நிமிட வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் (BSNL Rs 153 Plan):

அடுத்தபடியாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த திட்டம் தான் ரூ. 153 என்ற திட்டம். இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் (BSNL Rs 153 Plan) குறிப்பாக ஹெவி டேட்டா யூஸர் பயனர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 153 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 153 Prepaid Plan) திட்டம் 13 வகையான நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டம் முதலில் வழக்கமான 4 முக்கிய ரீசார்ஜ் நன்மைகளை வழங்குகிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உடன் இலவச நன்மைகள் அடங்கும். இந்த திட்டம் 26GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்திட்டத்துடன் கிடைக்கும் 26GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது.

இந்த திட்டம் 26 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையையும் கிடைக்கிறது. இந்த BSNL Rs 153 Plan, அதன் பயனர்களுக்கு இலவச நன்மையாக ஹேண்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் (Gameon), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), கேமியம் (Gameium), சிங்க் மியூசிக் (Zing Music), வாவ் எண்டெர்டைன்மெண்ட் (WOW Entertainment), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), மற்றும் லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast) போன்றவற்றை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 107 Plan and BSNL 153 Plan Details and Difference Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X