Home
News

ஏழைங்க வயித்துல அடிச்ச BSNL.. ரூ.100, ரூ.200 பட்ஜெட் பிளான்களின் வேலிடிட்டி திடீர் குறைப்பு.. கஸ்டமர்ஸ் கதறல்!

இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL - பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்), தனது பிரபலமான ரூ.107 மற்றும் ரூ.197 பிளான் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை மீண்டும் திருத்தியுள்ளது. கடைசியாக நவம்பர் 2025 இல் இந்த திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தது. இப்போது மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.107 பிளான் வவுச்சர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 200 நிமிட வாய்ஸ் கால்களையும், அன்லிமிடெட் டேட்டாவையும் (அதாவது 3ஜிபி டேட்டாவிற்கு மேல் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிஎஸ் ஆக குறைக்கப்படும்) 22 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கியது.

BSNL.. ரூ.100, ரூ.200 பட்ஜெட் பிளான்களின் வேலிடிட்டி திடீர் குறைப்பு!

இப்போது, ​​ரூ.107 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 22 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த திட்டம் 35 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது, அது பின்னர் 30 நாட்களாகவும், பிறகு 28 நாட்களாகவும், பின்னர் 22 நாட்களாகவும் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 20 நாட்களாக்கு இறங்கி வந்த உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 197 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது, தற்போது 35 நாட்கள் திருத்தப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை (முன்பு 42 நாட்கள்) வழங்குகிறது. அதனுடன் 300 நிமிட வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (5ஜிபி டேட்டாவிற்கு மேல் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்), மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை நன்மைகளையும் வழங்குகிறது.

முன்னதாக இந்த செல்லுபடியாகும் காலம் 42 நாட்களாக இருந்தபோது, ​​இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டா சேர்க்கப்பட்டிருந்தது; இது இப்போது 1ஜிபி அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 54 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்கிய இந்த திட்டம், பின்னர் 48 நாட்களாகவும், பிறகு 42 நாட்களாகவும், இப்போது 35 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் இணையதளம் தெரிவிக்கிறது.

மேற்கண்ட திட்டங்களும், அதன் பலன்களும் உங்கள் வட்டத்தை பொறுத்து மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே உங்கள் வட்டம் மற்றும் எண்ணுக்கு பொருந்தக்கூடிய சரியான ரீசார்ஜ் விவரங்களுக்கு, பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி (BSNL Selfcare App) அல்லது அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் இணையதளத்தை பார்க்கவும்.

ஜியோவும் கூட இதே போன்ற ஒரு வேலையை செய்துள்ளது. அதன் ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக் (Jio Rs.195 Cricket Data Pack) திட்டமானது 90 நாளில் இருந்து 30 நாட்களாக வேலிடிட்டி குறைப்பை பெற்றுள்ளது. இதன்கீழ் கிடைத்த டேட்டா பலன்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, ஜியோ நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை கணிசமாக குறைத்துள்ளது.

ஜியோ ரூ.195 கிரிக்கெட் டேட்டா பேக்கின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன் வேலிடிட்டி புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், நன்மைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தை ரீசாஜ் செய்யும் சந்தாதாரர்கள் மொத்தம் 15 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இது அனைத்தும் அதிவேகஇண்டர்நெட் ஸ்பீடின் கீழ் கிடைக்கும்.

ஒதுக்கப்பட்ட டேட்டா தீர்ந்த உடன், அதாவது 15ஜிபி டேட்டா காலி ஆனவுடன் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64 கேபிபிஎஸ் ஆகா குறைக்கப்படும்; இதே ஸ்பீடின் கீழ் இண்டர்நெட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பேக் - டேட்டா நன்மையை மட்டுமே கொண்டுள்ளது, இதில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 107 and Rs 197 Prepaid Plan Voucher Validity Reduced Again
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X