தீபாவளி ஆஃபர்.. ரூ.1 போதும்.. அடுத்த 30 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 நாட்களுக்கு இலவச ப்ரீபெய்ட் திட்டத்தை கொடுக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2 ஜிபி தினசரி டேட்டா (2GB Daily Data) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறுவது எப்படி? எந்தெந்த கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இது கொடுக்கப்பட்டது. இப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு (New BSNL SIM Card) வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ரூ.1 மதிப்புள்ள இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.
முக்கிய சலுகையான வாய்ஸ் கால்களை பார்க்கையில், வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களாக (Roaming Voice Calls) செய்ய கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கிடைக்கும். புதிய சிம் கார்டு வாங்கியவுடன் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பிஎஸ்என்எல் வெப்சைட்டில் கிடைக்கிறது.
அதேபோல பிஎஸ்என்எல் செல்ப்கேர் (BSNL Selfcare) ஆப் மூலமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அக்டோபர் 15ஆம் தேதி முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதேபோல நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. ஆகவே, 1 மாதத்துக்குள் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இது ரீசார்ஜ் செய்ய கிடைக்க இருக்கிறது.
பழைய கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது. இருப்பினும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து புதிதாக ஒரு திட்டம் மலிவான விலையில் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் டேட்டாவை கொடுக்கும் திட்டமாகும்.
பிஎஸ்என்எல் ரூ.225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அதே 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மற்ற சலுகைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள் கிடைக்காது. இப்போது, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன.
அதே நேரத்தில் இலவசமாக சிம் கார்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிம் கார்டுகளுக்கு ரூ.1 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை 30 நாட்களுக்கு கொடுத்து, கஸ்டமர்களை தக்க வைக்கவும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரெடியாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் அதிக கஸ்டமர்களையும் பெற்றது.


Click it and Unblock the Notifications








