Home
News

செப்.15 கடைசி.. அதுக்குள்ள 1 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் நிறுவனமானது, வெறும் ரூ.1 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. இந்த திட்டத்தை பெறுவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதியே கடைசி நாளாக இருந்தது. ஆனால், இப்போது, செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எப்படி பெறுவது? பழைய கஸ்டமர்களுக்கு கிடைக்குமா? இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.

இந்த பிஎஸ்என்எல் ரூ.1 திட்டமானது பழைய கஸ்மர்களுக்கு கிடைக்காது. புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே, ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். உண்மையில், புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த 30 நாட்கள் சேவையை கிட்டத்தட்ட இலவசமாக பெற்று கொள்ளலாம். வெறும் ரூ.1 மட்டுமே உங்களுக்கு செலவாகும்.

செப்.15 கடைசி.. அதுக்குள்ள 1 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. 30 நாட்கள் சேவை!

இதுபோக உங்களுக்கு 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. உங்களது சர்க்கிளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும்பட்சத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த திட்டமானது, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ப்ரீடம் திட்டமாக (Freedom Plan) கொடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதியே தொடங்கப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ரூ.1 திட்டம் கிடைக்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், இந்த திட்டம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், காலஅவகாசம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் கிடைக்க இருக்கிறது.

இந்த தேதிக்குள் புதிய சிம் கார்டு வாங்கினால், உங்களுக்கு வெறும் ரூ.1 செலவில் 30 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படும். இந்த திட்டம் பிஎஸ்என்எல் வெப்சைட் மற்றும் ஆப் ஆகியவற்றில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): இந்த திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் திட்டமாக இருக்கிறது. இதில் ரூ.199 விலை கொண்ட திட்டத்தைவிட அதிக சலுகைகளை கொடுக்கிறது. நீங்கள் புதிய சிம் கார்டு வாங்கிய பிறகு அதை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதை பெற்ற பிறகு உங்களுக்கு 30 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதோபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டா 4ஜி சர்க்கிளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு 4ஜி வேகத்திலேயே கொடுக்கப்படும்.

மற்ற சர்க்கிள்களில் 3ஜி, 2ஜிக்கு ஏற்ப கொடுக்கப்படும். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த சலுகைகள் போக 100 எஸ்எம்எஸ்களை நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த ரூ.1 திட்டம் கொடுக்கிறது.

இதே சலுகைகளை 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெற வேண்டுமானால், ரூ.199 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1 Plan With 30 Days Validity Unlimited Calls 2GB Daily Data Extends Till September 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X