போட்டான் பாரு பிஎஸ்என்எல்.. 2025 ஜனவரி 5 தேதி குறிச்சாச்சு.. புது சிம் வாங்கி போடுங்க.. இல்லனா அவ்ளோதான்!
பிஎஸ்என்எல் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை பெறுவதற்கு ஜனவரி 5 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இந்த திட்டத்தை பெற என்ன செய்ய வேண்டும், எந்த கஸ்டமர்களுக்கு கிடைக்கும், முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கும் மட்டுமே கிடைக்கும். ஆகவே, புதிய சிம் கார்டு வாங்கியவுடன் முதலில் ரூ.1 விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்டது. பல முறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஜனவரி 5 ஆம் தேதி வரையில் பெறலாம்.
புதிய சிம் கார்டு வாங்கிவுடன், பிஎஸ்என்எல் செல்ப் கேர் ஆப் அல்லது பிஎஸ்என்எல் போர்டல் வழியாக இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
மேலும், பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், அந்த வேகத்திலேயே இந்த 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் 4ஜி டேட்டாவுடன் திட்டங்கள் கொடுக்கப்படவில்லை. மேலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கிடைக்கிறது.
மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறுவதற்கு புதிய சிம் கார்டு வாங்க வேண்டும். இப்போது, பிஎஸ்என்எல் ரீடெயில் ஸ்டோர்களில் இலவமாக ப்ரீபெய்ட் சிம் கார்டுகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதை வாங்கிய பிறகு ரூ.1 விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜனவரி 5 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.
இதே சலுகைகளை ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் பெற வேண்டுமானால், அதற்கு ரூ.229 விலை கொண்ட திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் கிடைக்கும் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மாதம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
மேலும், 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு அனுப்ப கிடைக்கும். இந்த சலுகைகள் ஒட்டுமொத்த பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஆகவே, இதற்காக புதிய சிம் கார்டு வாங்கி வேண்டிய அவசியம் கிடையாது. ரூ.1 விலை கொண்ட திட்டத்துக்கு மட்டுமே புதிய சிம் கார்டு வாங்க வேண்டும். பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளே இப்போது வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








