நவ.9 கடைசி.. இனிமே ரூ.1-க்கு ரீசார்ஜ்.. Jio, Airtel, Vi கனவுல கிடைக்காது.. 24 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கனவிலும் நினைக்க முடியாத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதில் ரூ.1 விலைக்கு கிடைக்கும் ஃப்ரீடம் ப்ரீபெய்ட் திட்டமானது, 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ப்ரீடம் 2.0 (BSNL Freedom 2.0) சலுகையில் கீழ் இந்த ரூ.1 திட்டம் கிடைக்கிறது. அதாவது, புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிய பிறகு முதலாவது ரீசார்ஜ் செய்யும்போது மட்டும், இந்த விலைக்கு திட்டம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே, பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் பட்சத்தில் இந்த திட்டம் கிடைக்காது. அதேபோல இதற்கு கடைசி தேதியும் இருக்கிறது.

வருகிற நவம்பர் 9ஆம் தேதிக்குள் புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த பிஎஸ்என்எல் ரூ.1 திட்டம் கிடைக்கும். இந்த தேதி பல முறை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையும் நவம்பர் 9ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த தேதிக்குள் மட்டுமே ரூ.1 விலைக்கு திட்டத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.1 எப்ஆர்சி திட்டம் (BSNL Rs 1 FRC Plan): இந்த எப்ஆர்சி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 24 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. முன்னதாக 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இருப்பினும், பல முறை தேதி நீட்டிக்கப்பட்டதால், 24 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஆகவே, 24 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், அதில் மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். இதுபோக நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் 1 ஜிபி டேட்டாவை அந்த நாள் முடிவதற்குள் பயன்படுத்திவிட்டால், டேட்டா முழுவதும் தீர்ந்து போகாது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து கொடுக்கப்படும். போஸ்ட் டேட்டா சலுகையில் இது வழங்கப்படுகிறது.
மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.1 எப்ஆர்சி திட்டம் கொடுக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த எப்ஆர்சி திட்டம் கொடுக்கிறது. இந்த சலுகைகளுடன் வருகிற நவம்பர் 9ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதுபோக அக்டோபர் 15ஆம் தேதியான இன்று மற்றொரு திட்டத்தின் சலுகை முடிகிறது. அதாவது, பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தில் கூடுதலாக கொடுக்கப்படும் 15 நாட்கள் வேலிடிட்டியை பெறுவதற்கான கடைசி நாளாக இன்று இருக்கிறது. இந்த திட்டத்துக்கு வழக்கமாக 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இப்போது கூடுதலாக 15 நாட்கள் கிடைக்கிறது.
ஆகவே 380 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த 380 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications
