Home
News

ரூ.1-க்கு Jio, Airtel-ஐ முடித்த BSNL.. 24 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களிடம் ரூ.1 இருந்தால் போதும் 24 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த திட்டமானது ஆஃபரில் கீழ் கொடுக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது எந்த தேதி? யாருக்கெல்லாமல் ரூ.1 விலைக்கு திட்டம் கிடைக்கும்? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்டமானது, ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன் (First Recharge Coupon) ஆக இருக்கிறது. அதாவது, இலவசமாக கிடைக்கும் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கி பிறகு முதலாவது ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஏற்கனவே, பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது. அதேபோல தேதியையும் கவனக்க வேண்டும்.

ரூ.1-க்கு Jio, Airtel-ஐ முடித்த BSNL.. 24 நாட்கள் வேலிடிட்டி!

வருகிற அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கியி பிறகு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த பிஎஸ்என்எல் ரூ.1 திட்டம் கிடைக்கும். இந்த தேதி நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், பல முறை இந்த திட்டத்தின் சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், பிஎஸ்எஸ்என் சிம் வாங்கிய பிறகு இதை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): ஆரம்பத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன் திட்டம் கிடைத்தது. ஆனால், பல முறை தேதி நீட்டிக்கப்பட்டதால் 24 நாட்களாக வேலிடிட்டி குறைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், ரூ.1 விலைக்கு 24 நாட்கள் வேலிடிட்டி மற்ற டெலிகாம் நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது.

இந்த 24 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கொடுக்கப்படும். இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlmited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன. இதுபோன்ற சலுகை விலை திட்டத்தில் மொத்தமாகவே டேட்டா கிடைக்கும். தினசரிக்கு கொடுக்கப்படாது.

ஆனால், இதில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 24 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படும் போஸ்ட் டேட்டாவையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.1 திட்டம் கொடுத்து இருக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதே 24 நாட்கள் வேலிடிட்டியை பழைய கஸ்டமர்கள் பெற விரும்பினால், ரூ.147 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வேலிடிட்டி மற்றும் சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் திட்டங்கள் கிடைக்காது. ஆகவே, இதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் கஸ்டமர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.147 திட்ட விவரங்கள் (BSNL Rs 147 Plan Details): 24 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த பிஎஸ்என்எல் ரூ.147 திட்ட கிடைக்கிறது. இந்த நாட்களில் முன்பு பார்த்தை திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlmited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன. இதில் தினசரிக்கு டேட்டா கிடைக்காது.

24 நாட்களுக்கும் மொத்தமாகவே 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், 5 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே, எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. பழைய கஸ்டமர்களுக்கு இந்த சலுகையும், புதிய கஸ்டமர்களுக்கு முன்பு பார்த்த சலுகையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1 Plan 24 Days 1GB Data Validity Check First Recharge Coupon Plan Benefits Till Oct 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X