Home
News

BSNL-க்கு கும்பிடு.. டிசம்பர் 31-க்கு முடிந்தது.. புது SIM கார்டு வாங்கிடுங்க.. இல்லனா போச்சு.. என்ன வருது?

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு (New BSNL SIM Card) வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1 விலை கொண்ட திட்டம் கிடைக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை கேட்டால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்களே மூக்கில் விரல் வைத்துவிடுவார்கள். இந்த பிஎஸ்என்எல் ஃப்ரீடம் திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1 திட்டத்தை கொண்டுவந்தது. நாடு முழுவதும் 4ஜி சேவை தொடங்கப்பட்டு உள்ளதால், புதிய சிம் கார்டுகளை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதை செய்தது. ஆகவே, இலவமாக புதிய சிம் கார்டு வாங்கிய பிறகு அவர்களுக்கு ரூ.1 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய கொடுத்தது.

BSNL-க்கு கும்பிடு.. டிசம்பர் 31-க்கு முடிந்தது.. புது SIM கார்டு?

பிஎஸ்என்எல் ரூ. 1 ஃப்ரீடம் திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Freedom Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதை முதல் ரீசார்ஜ் ஆக செய்து கொள்ளலாம். ஆகவே, மீண்டும் செய்ய முடியாது. ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

ஆகவே, 30 நாட்களுக்கு மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கொடுக்கப்படும். மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ள முடியும். இந்த சலுகைகள் அனைத்தும் வெறும் ரூ.1 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மட்டுமே பெற்று கொள்ள முடியும். அதற்கு மேல் தேதி நீட்டிக்கப்படுமா என்பதை பிஎஸ்என்எல் தெரிவிக்கவில்லை. ஆகவே, அந்த தேதிக்குள் பெற்றவிடுங்கள்.

இந்த திட்டத்தை போலவே பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டமும் (BSNL Silver Jubilee Plan) களமிறக்கப்பட்டுள்ளது. இதிலும் நம்ப முடியாத விலைக்கு ஃபைபர் டேட்டா (Fiber Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா (OTT) மற்றும் லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 625 சில்வர் ஜூபிலி திட்ட விவரங்கள் (BSNL Rs 625 Silver Jubilee Plan Details): இதுவொரு பைபர் டூ தி ஹோம் திட்டமாக இருக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் கிடைக்கிறது. இதற்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்கள் முழுவதும் 75 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஒரு மாதம் முழுவதும் அதிகபட்சமாக 2500 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் ஃபைபர் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 4 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.

லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி கால்கள் (Unlimited Local & STD Calls) செய்ய கிடைக்கிறது. 600+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் சேனல்களை கொடுத்துள்ளது. இந்த சேனல்களை இன்டர்நெட் இல்லாமலேயே பார்த்து கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) ஆகிய 2 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1 Freedom Plan With 30 Days Validity 2GB Data Unlimited Voice Calls Check New SIM Card Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X