Home
News

1 ரூபாய் புரட்சி.. செப்.15-க்கு முடியுது BSNL ஆஃபர்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடுத்த ப்ரீடம் ஆஃபர் (Freedom Offer) இன்றுடன் முடிகிறது. ஆகவே, இன்றைக்குள் பிஎஸ்என்எல் ரூ 1 ப்ரீடம் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்த ப்ரீடம் ஆஃபர் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றதால், செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் ஆஃபர் நீட்டிக்கப்பட்டது. இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அடித்து பிடித்து புதிய சிம் கார்டு வாங்க தொடங்கிவிட்டனர். ஆமாம், இந்த ஆஃபர் புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

1 ரூபாய் புரட்சி.. செப்.15-க்கு முடியுது BSNL ஆஃபர்.. 30 நாட்கள் சேவை!

ஆகவே, இலவச சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்களுக்கு நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கிறது. அதிலும், இதுவொரு 4ஜி சிம் கார்டாக இருப்பதால், 4ஜி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். பிஎஸ்என்எல் சிம் கார்டை பெற்ற பிறகு அது ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் ரூ.1 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 1 ப்ரீடம் திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Freedom Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வழக்கம்போல பிஎஸ்என்எல் ஆப் அல்லது வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதை ரீசார்ஜ் செய்த பிறகு 30 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் சிம் ஆக்டிவ் கொடுக்கப்படும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்யலாம்.

ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ஃப்ரீடம் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில் 4ஜி வேகத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 4ஜி சர்க்கிளில் இல்லாத கஸ்டமர்களுக்கு வழக்கம்போல கிடைக்கும்.

நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைப்பதால், மொத்தமாக 30 நாட்களுக்கு 60 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 2 ஜிபி டேட்டா முடிந்து போன பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். ஆனால், தொடர்ந்து கொடுக்கப்படும். பிஎஸ்என்எல் ஃப்ரீடம் திட்டத்தில் இந்த சலுகைகளே கிடைக்கிறது.

நீங்கள் பழைய பிஎஸ்என்எஸ் கஸ்டமர்களாக இருந்தால், ரூ.299 விலை கொண்ட திட்டத்தில் மேற்கண்ட சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த விலைக்கு ஏற்ப அதிக டேட்டா கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த திட்டத்திலும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகை வாரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டாவை 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தலாம். இதை தவிர மற்ற சலுகைகள் ஒன்றுதான். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் கிடைக்கின்றன. இது ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் திட்டமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1 Freedom Offer Ends Today With Unlimited Calls 2GB Daily Data Free SIM For 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X