Home
News

BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!

By Prakash

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் பல மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ரூ.1,999-ப்ரீபெய்ட்

ரூ.1,999-ப்ரீபெய்ட்

இந்நிலையில் இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.1,999-ப்ரீபெய்ட்திட்டத்தில வேலிடிட்டியை கூடுதலாக 71நாட்களுக்கு அறிவித்துள்ளது.

ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020

ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020

குறிப்பாக ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020-க்கு இடையில் இந்த ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 436நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் என பிஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்மைகள்

நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தின நன்மைகள் ஆனது, தினசரி 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்றகுரல் அழைப்பு(ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பு), தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள்கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜி சேவை

4ஜி சேவை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட விலை உயர்வு நடவடிக்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் எந்த விதமான பங்களிப்பையும் அளிக்கவில்லை. இது ஒரு சிறந்த நடவடிக்கை ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் மார்ச் 2020இறுதிக்குள் 4ஜி சேவையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ

ஜியோ

பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே ஜியோ நிறுவனமும் ரூ.2,020-திட்டத்தை கொண்டுள்ளது, இந்த திட்டத்தில் ஒருநளைக்கு 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டு ஜியோ குரல் அழைப்புகள், 12,000 நிமிடங்கள் ஜியோ அல்லாத எஃப்யூபி நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளை 365நாட்களுக்கு வழங்குகிறது.

 இரண்டு மடங்கு டேட்டா நன்மை

இரண்டு மடங்கு டேட்டா நன்மை

ஜியோவின் ரூ.2,020 மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தை ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம்தான் இரண்டு மடங்கு டேட்டா நன்மைகளை வழங்குகிறது, மேலும் கூடுதலாக 71நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது என்பதுகூடுதல் தகவல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1,999 Prepaid Plan Validity Days Got Increased up to 436 Days : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X