Home
News

ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மையை குறைத்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த நிலையில், தற்போது ஒரு திட்டத்தில் டேட்டா நன்மையை குறைத்துள்ளது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் டேட்டா நன்மையை குறைத்த அந்த திட்டம் ரூ.1999 திட்டம் ஆகும்.

 ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு பிரபலமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முன்பு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம் வந்த தகவலின்படி வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்த ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலிடிட்டி மாற்றப்படவில்லை

வேலிடிட்டி மாற்றப்படவில்லை

பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மை குறைக்கப்பட்ட போதிலும் வேலிடிட்டி மாற்றப்படவில்லை.அதன்படி பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு வரம்பற்றகுரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது.

லோக்தூன் கன்டென்

லோக்தூன் கன்டென்

மேலும் பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு நன்கு அறியப்பட்ட ழுவுவு தளமான - ஈரோஸ் நௌவ்வில் இருந்து வரம்பற்ற கன்டென்டை அணுகலாம். பின்பு பயனர்கள் 60 நாட்கள் லோக்தூன் கன்டென்டையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.வி 2,399 திட்டம்

பி.வி 2,399 திட்டம்

குறிப்பாக பிஎஸ்என்எல் இப்போது அறிவித்த இந்த மாற்றத்தின் மூலம் பி.வி 2,399 திட்டமானது பிஎஸ்என்எல்-இன் 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ஆண்டு திட்டமாக மாறுகிறது. அதேபோல் இந்த புதிய மாற்றம் பிஎஸ்என்எல் செயல்படும் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் நடைமுறைக்கு வரும்.

பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு பிறகு 2ஜிபி

அதேபோல் பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு பிறகு 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையை வருடாந்திர அடிப்படையில் தேடும்பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.1,999 திட்டம் நல்ல தேர்வாக அமையலாம்.

பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்

மேலும்பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரிடேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற
சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்

இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்

குறிப்பாக இந்த ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி வழங்கப்படும் 1.5ஜிபி டேட்டா வரம்புக்கு பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.மேலும் கிட்டத்தட்ட இதேபோன்ற திட்டங்களில் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி-ஐ வழங்குகின்றன, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஆறு நாட்கள் கூடுதல் செல்லுபடியை வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 1,999 Annual Prepaid Plan Revised: Data Benefit Reduced! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X