395 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் நன்மை கிடைக்கும் ஒரே BSNL திட்டம்.. விலை இது தான்..

|

இந்திய அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பி.எஸ்.என்.எல் (BSNL) மீண்டும் தனது ரூ. 1,999 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் திருத்தியுள்ளது. அதாவது, இப்போது இந்த நீண்ட கால திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்தை நிறுவனம் 30 நாட்கள் கூடுதலாக மாற்றித் திருத்தி அமைத்துள்ளது. இதனால், பயனர்களுக்கு என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பி.வி 1,999 திட்டத்தின் மீது திருத்தம்

பி.வி 1,999 திட்டத்தின் மீது திருத்தம்

இந்த ஆண்டின் குடியரசு தினத்தின் போது நிறுவனம் கடைசி திருத்தத்தை பி.வி 1,999 திட்டத்தின் மீது மாற்றி அமைத்தது. இப்போது மீண்டும் சந்தாதாரர்களுக்கு 30 நாட்கள் கூடுதல் செல்லுபடியை வழங்குவதற்காக மீண்டும் இந்த திட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை மார்ச் 2, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது, இது மார்ச் 31, 2021 வரை மட்டுமே கிடைக்கும்.

395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி

395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி

சலுகை காலத்தில், பிஎஸ்என்எல்லின் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இப்போது மொத்தமாக 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜனவரி இறுதியில், பி.எஸ்.என்.எல் ரூ.1,999 திட்டத்தின் தரவு நன்மையை ஒரு நாளைக்கு முந்தைய 3 ஜிபியிலிருந்து 2 ஜிபிக்கு குறைத்தது. அதே மாதத்தில், டெல்கோவும் அதே திட்டத்துடன் 21 நாட்கள் கூடுதல் சேவையை வழங்கியது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

பிஎஸ்என்எல் ரூ. 1,999 திட்டத் திருத்தம்

பிஎஸ்என்எல் ரூ. 1,999 திட்டத் திருத்தம்

பி.வி 1999 அல்லது BSNL ரூ. 1,999 என்பது பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும் வருடாந்திர திட்டமாகும். வழக்கமாக, இந்த திட்டம் 365 நாட்களுக்கு நன்மைகளுடன் வருகிறது. இருப்பினும், இப்போது 395 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் திருத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டபடி, சலுகை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது, மேலும் இது அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு எப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்வது?தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு எப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்வது?

இத்தனை நன்மைகளா?

இத்தனை நன்மைகளா?

நன்மைகளைப் பொறுத்தவரை, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 395 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன் 365 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா, முதல் 60 நாட்களுக்கு லோக்தூன் நன்மை மற்றும் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் ஆகியவற்றை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Rs 1,999 Annual Prepaid Plan Now Comes With 395 Days of Validity After New Revision : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X