Home
News

பிஎஸ்என்எல் : ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189/-க்கு அசத்தலான 3 புதிய காம்போ பேக்ஸ்.!

மேலும் பிபி249 திட்டத்த்தில் சேரும் அனைத்து பயனர்களும் ஒரு வருட காலத்திற்கு 1ஜிபி எல்லை வரையிலாக 2 எம்பிபிஎஸ் வேகம் வரை பெறுவர் பின்னர் 1 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை அனுபவிப்பர்.

By Muthuraj

சமீப நாட்களாக ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய பெரு நிறுவனங்களின் பாணியில் அதிரடியான பல புதிய மற்றும் திருத்தப்பட்ட திட்டங்களை பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாதாரர்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு மாற்று நாளிலும் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அல்லது ஒரு கட்டண திருத்தத்தை அல்லது செல்லுபடியாகும் நீட்டிப்பை அறிமுகப்படுத்துகிறது என்றே கூறலாம். அப்படியாக, பிஎஸ்என்எல் தற்போது அதன் மூன்று புதிய எஸ்.டி.விகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.101/-, ரூ.169/- மற்றும் ரூ.189/-

ரூ.101/-, ரூ.169/- மற்றும் ரூ.189/-

பிஎஸ்என்எல், ரூ.101/-, ரூ.169/- மற்றும் ரூ.189/- என்ற மூன்று காம்போ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் 90 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

90 நாட்கள்

90 நாட்கள்

மேலும் 90 நாட்கள் செல்லுபடிக்கு பின்னர் இந்த மூன்று காம்போ திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் நீக்கப்படலாம் அல்லது சந்தை சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டிவி 101

எஸ்டிவி 101

அறிவிப்பின்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட செயல்திறன் நன்மைகளை வழங்குவதற்காக இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்கீழ் எஸ்டிவி 101 ஆனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.101/- பேலன்ஸ் உடன் நாள் ஒன்றிற்கு 500எம்பி தரவை ஏழு நாட்களுக்கு வழங்கும்.

எஸ்டிவி 169

எஸ்டிவி 169

மறுபக்கம் எஸ்டிவி 169 ஆனது ரூ.169/- மெயின் பேலன்ஸ் உடன் 21 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

எஸ்டிவி 189

எஸ்டிவி 189

மூன்றாவது மற்றும் கடைசி காம்போ பேக் ஆன எஸ்டிவி 189 ஆனது ரூ.189/- மெயின் பேலன்ஸ் உடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 3 ஜிபி தரவை வழங்குகிறது.

ஒப்பிடும் போது

ஒப்பிடும் போது

உங்களின் தற்போதைய கட்டணத் திட்டத்தின் அடிப்படையின்கீழ் உள்ள நிலையான கட்டணங்களான எஸ்டிவி 169 மற்றும் எஸ்டிவி 189 ஆகிய இதர நிறுவனங்களின் திட்டங்களோடு ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் எஸ்டிவி 101 ஆனது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

90 நாட்களுக்கு

90 நாட்களுக்கு

இருப்பினும், ஏழு நாட்களின் செல்லுபடியாகும் என்பது ஏமாற்றமளிக்கிறது. பிஎஸ்என்எல்-ன் சமீபத்திய ரூ.333, ரூ. 349, மற்றும் ரூ.395 பத்து வாரங்களுக்கு மேலும் பலனளிக்கிறது. மற்றும் எஸ்டிவி 333 திட்டம் தற்போது சந்தையில் சிறந்த தரவுத் திட்டமாகவும் திகழ்கிறது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு வழங்குகிறது.

2 ஜிபி

2 ஜிபி

மறுபக்கம் ரூ.395/- திட்டமானது சிறந்த ப்ரீபெயிட் திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டம் 3000 நிமிடங்கள் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளும் மற்றும் பிஎஸ்என்எல் டூ இதர நெட்வர்க் உடனான 1800 நிமிட அழைப்புககளுக்கான நன்மைகளுடன் சேர்த்து 71 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது.

ஒரு ஆண்டுக்கு

ஒரு ஆண்டுக்கு

முன்னதாக இன்று பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மலிவான மற்றும் கவர்ச்சிகரமான பிபி249 பிராட்பேண்ட் திட்டத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, முன்னர் 6 மாதம் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

பிபி249 திட்டத்த்தில் சேரும் அனைத்து பயனர்களும் ரூ.249/-க்கு ஒரு வருட காலத்திற்கு 1ஜிபி எல்லை வரையிலாக 2 எம்பிபிஎஸ் வேகம் வரை பெறுவர் பின்னர் 1 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை அனுபவிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 3 முதல்

மே 3 முதல்

தற்போது புதிதாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189/- ஆகிய 3 புதிய காம்போ திட்டங்களும் கடந்த மே மூன்றாம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rolls Out Three New Combo STVs of Rs. 101, Rs. 169, and Rs. 189. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X