Home
News

தினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.!

ஏனெனில் அந்த எதிர்ப்பை அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் காட்டியுள்ளது. ஆம், பார்தி சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இன்று, ஜியோவிற்கு எதிரான ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா வாய்ப்பை (கூடுதல் 1.5ஜிபி டேட்டா) ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற தனியார் டெலிகிராம் ஆப்ரேட்டர்கள் எதிர்க்கும் என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பை உடனே அழித்து விடுங்கள்.

தினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.!

ஏனெனில் அந்த எதிர்ப்பை அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் காட்டியுள்ளது. ஆம், பார்தி சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இன்று, ஜியோவிற்கு எதிரான ஒரு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் காம்போ திட்டங்களானது இனி 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கூடுதல் டேட்டாவானது பிஎஸ்என்எல்-ன் ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களான ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகியவற்றில் கிடைக்கும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை தினசரி அடிப்படையில் வழங்கி வருகின்றன. இனி இவைகளின் முழு செல்லுபடியாகும் காலத்திற்க்கும் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

இந்த திட்டங்களின் பிற நலன்களும் ஒரே மாதிரியானவை தான். அதாவது ஐந்து திட்டங்களும் தினசரி அல்லது வாராந்திர வரம்பு இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக இதன் ரூ.189 மற்றும் ரூ.999 ஆகியவை பிஎஸ்என்எல்-ன் உண்மையான வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்குகிறது, அதாவது தினசரி வரம்பிற்கு பின்னர் 40 Kbps என்கிற அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.

செல்லுபடியாகும் காலத்தை பொறுத்தவரை ரூ.186/- கட்டணத் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்; ரூ.429/- ஆனது 81 நாட்களுக்கு செல்லுபடியாகும்; ரூ.485/அனைத்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். நிறுவனத்தின் சிக்ஸர் திட்டம் என்று அழைக்கப்படும் ரூ.666/- ஆனது 129 நாட்களுக்கு செல்லுபடியாகும். இறுதியாக ரூ.999/- ப்ரீபெய்டு திட்டமானது 180 நாட்களுக்கு செல்லுபடியாகும்

இந்த கூடுதல் டேட்டா வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் தொடங்கி அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு விளம்பர வாய்ப்பு என்பதை மறக்க வேண்டாம். அதாவது ரிலையன்ஸ் ஜியோவை போன்றே.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதன் முழு ப்ரீபெய்ட் கட்டண திட்டங்களிலும் ஒரு தற்காலிக கூடுதல் டேட்டா வாய்ப்பை அறிமுகப்படுத்தியது.

அந்த வாய்ப்பின் கீழ் ஒவ்வொரு ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழும் கூடுதலாக 1.5 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். இந்த வாய்ப்பு ஜூன் 30, 2018 வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Rivals Jio by Increasing Daily Data Benefit of its Unlimited Combo Prepaid Plans to 2GB. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X