BSNL STV 99, STV 298, STV 319, PV 399, PV 699 திட்டங்களில் கூடுதல் நன்மை.. புதிய திருத்தம்..

|

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூன்று ப்ரீபெய்ட் எஸ்.டி.வி மற்றும் இரண்டு பிளான் வவுச்சர்களை (PV) திட்டங்களில் சில மாற்றங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குத் திருத்தியுள்ளது. BSNL STV 99, STV 298 மற்றும் STV 319 ஆகிய மூன்று எஸ்.டி.விகள் உடன் PV 399 மற்றும் PV 699 ஆகிய இரண்டு பி.வி-க்களில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பயனர்களுக்குக் கூடுதல் வேலிடிட்டி மற்றும் டேட்டா பயனை வழங்குகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குக் கூடுதல் நன்மை

குறிப்பிட்ட காலத்திற்குக் கூடுதல் நன்மை

பி.எஸ்.என்.எல் பி.வி 699 திட்டத்தின் செல்லுபடியை நீட்டித்ததுடன், மீதமுள்ள திட்டங்களுக்குக் கூடுதல் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் நிறுவனம் சேர்த்துள்ளது. பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்குக் கூடுதல் நன்மைகளை நிறுவனம் சேர்த்துள்ளது நன்மைக்கே என்றாலும் கூட இந்த நன்மை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.

திருத்தத்திற்குப் பின்னர் 10 ஜிபி வரை டேட்டா

திருத்தத்திற்குப் பின்னர் 10 ஜிபி வரை டேட்டா

திருத்தத்திற்குப் பின்னர் குறிப்பிட்ட சில திட்டங்கள் உங்களுக்கு 10 ஜிபி வரை டேட்டா நன்மைகளுடன் இப்போது கிடைக்கிறது. இந்த புதிய திருத்தப்பட்ட திட்டங்கள் மார்ச் 31, 2021 வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு டெல்கோ நிறுவனம் மீண்டும் அதன் பழைய நன்மைகளுக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஐந்து பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

BSNL STV 99 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL STV 99 இப்போது என்ன வழங்குகிறது?

STV 99 திட்டம் தற்போது கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டம் வழக்கமாக அனைத்து நெட்வொர்க்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 22 நாட்களுக்கு இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோன் (PRBT) ஆகியவற்றை வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் செல்லுபடியைத் தக்க வைத்துக் கொண்டது, ஆனால் இந்த புதிய திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் 99 SMS நன்மையுடன் இப்போது வருகிறது.

BSNL STV 298 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL STV 298 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL STV 298 எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 54 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 100 SMS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இப்போது, இந்த ​​பேக் 56 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக ஈரோஸ் சந்தா ஆகியவற்றைத் திருத்தத்திற்குப் பின்னர் வழங்குகிறது.

WhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்?WhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்?

BSNL STV 319 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL STV 319 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு STV 319 ஐ அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு கடந்த காலங்களில் நிறையத் திருத்தங்களுக்கு இந்த திட்டம் உட்பட்டிருந்தது, ஆனால் இந்த புதிய திருத்தம் ஒரு தனித்துவமானது. ஏனெனில், BSNL இந்த திட்டத்தில் 10 ஜிபி டேட்டா நன்மை மற்றும் 300 SMS ஆகியவற்றைச் சேர்த்து, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் 75 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

BSNL PV 399 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL PV 399 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL PV 399 திட்டமானது தினமும் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS, இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் லோக்தூன் உள்ளடக்கம் கொண்ட வரம்பற்ற காம்போ திட்டம் ஆகியவற்றை 80 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இப்போது இது அதே 80 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.

BSNL PV 699 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL PV 699 இப்போது என்ன வழங்குகிறது?

BSNL PV 699 திட்டம் தினமும் 0.5 ஜிபி தரவு, தினமும் 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முதல் 60 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றைக் கொண்ட வரம்பற்ற காம்போ திட்டமாகும். இந்த திட்டம் பொதுவாக 160 நாட்கள் செல்லுபடியாகும்,

180 நாட்களுக்கு இப்போது கிடைக்கிறது

180 நாட்களுக்கு இப்போது கிடைக்கிறது

இருப்பினும், பிஎஸ்என்எல் 2021 மார்ச் 31 வரை கூடுதல் 20 நாட்கள் செல்லுபடியை இப்போது வழங்குகிறது. இதன் பொருள் BSNL PV 699 ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த 180 நாட்களுக்கு இப்போது கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Revises STV 99, STV 298, STV 319, PV 399 and PV 699 Prepaid Plans For Limited Period Of Time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X