பிஎஸ்என்எல் ரூ.333 மற்றும் ரூ.444/-ல் அட்டகாசமான திருத்தம்; உடனே அமலானது.!
இந்த திருத்தத்தின்கீழ் இரு திட்டங்களுமே முந்தையதைவிட சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. அவைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.
இறுதியாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திடமிருந்து ஒரு நல்ல ப்ரீபெய்ட் கட்டண திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் பிரபலமான எஸ்டிவி 333 மற்றும் எஸ்டிவி 444 ஆகிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களை திருத்தியுள்ளது.
இந்த திருத்தத்தின்கீழ் இரு திட்டங்களுமே முந்தையதைவிட சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. அவைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

டேட்டா நன்மை மட்டும்.!
நேற்றுவரை இந்த இரண்டு திட்டங்களுமே ஒரு டேட்டா நன்மை மட்டும் வழங்கும் திட்டங்களாக இருந்தன. ஆனால் இன்றுமுதல் குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்கும். இந்த நன்மையானது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மட்டுமே என்கிற வரம்பை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட்.!
இதில் என்ன சிறப்பான விடயம் இருக்கிறது என்று புரியாதரவர்களுக்கு, இந்த திருத்தத்தின் ஒரு பகுதியாக திட்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அட்டகாசமான டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களாக அறிமுகமான இந்த திட்டங்கள் இப்போது அன்லிமிடெட் அழைப்புகளையும் வழங்குகிறது.

இப்போது எஸ்டிவி 333
எஸ்டிவி 333 ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான தரவை (80 கேபிபிஸ் வேகம்) மொத்தம் 45 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

முன்பு எஸ்டிவி 333
முன்னர் இந்த திட்டமானது 45 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 3ஜிபி தரவு நன்மையை மட்டுமே வழங்கிய இந்த எஸ்டிவி 333 திட்டமானது டிரிபிள் ஏசிஸ் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது எஸ்டிவி 444
எஸ்டிவி 444 ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 4ஜிபி அளவிலான தரவை (80 கேபிபிஸ் வேகம்) மொத்தம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

முன்பு எஸ்டிவி 444
முன்னர் இந்த திட்டமானது அதே 60 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 4ஜிபி தரவு நன்மையை மட்டுமே வழங்கியதும், இந்த எஸ்டிவி 444 திட்டமானது நிறுவனத்தின் பிஎஸ்என்எல் சாவ்க்கா என்றும் அழைக்கப்படுகிறது.

எஸ்டிவி 448
தவிர, பிஎஸ்என்எல் அதன் எஸ்டிவி 448 திட்டத்தையும் மறுஆய்வு செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது வரம்புக்குட்பட்ட குரல் அழைப்புகள் (மும்பை மற்றும் தில்லி தவிர), ஒரு நாளைக்கு 1ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச காலர் ட்யூன் ஆகிய நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்கும்.

இன்றுமுதல் செயல்படுகின்றன.!
சில வட்டாரங்களில் இந்த திட்டத்தின் விலை வேறுபடுகிறது. உதாரணமாக, இதே திட்டம் கேரள வட்டத்தில் ரூ.446/-க்கு கிடைக்கிறது. நிறுவனத்தின் இந்த அனைத்து மாற்றங்களும் இன்றுமுதல் - ஏற்கனவே - செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.399.!
இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட புதிய பிஎஸ்என்எல் ரூ.399/- ஆனது வீட்டு வட்டத்தில் எந்த வலையமைப்பிற்கும் உள்ளான வரம்பற்ற குரல் அழைப்புகள், பில்லிங் சுழற்சிக்கு 30 ஜிபி தரவு வழங்குகிறது. ஆனால் எந்தவொரு எஸ்எம்எஸ் நன்மைகளையும் அளிக்கவில்லை. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications