Home
News

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: கூடுதல் டேட்டா அறிவிப்பு.!

பிஎஸ்என்எல் ரூ.155 திட்டத்தில் இதற்குமுன்பு 1.5ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது.

By Prakash S

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது பல்வேறு திட்டங்கள் மற்றும் கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்த வண்ணம் உள்ளது, கடந்த வாரம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஜியோவிற்கு போட்டியாக பல்வேறு கூடுதல் டேட்டா நண்மையை அறிவத்தது, அதை தொடர்ந்து இன்று புதிய டேட்டா நன்மையை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: கூடுதல் டேட்டா.!

இதற்கு முன்பு பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் கூடுதலான டேட்டா நன்மையை அறிவித்தது, அதன்படி இந்த தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 54ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது. மேலும் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.198 மற்றும் ரூ.155 திட்டத்தில் அறிவித்துள்ள கூடுதல் டேட்டா நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.155 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.155 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.155 திட்டத்தில் இதற்குமுன்பு 1.5ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் வழஙக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டத்தில் இதற்குமுன்பு 1ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.68 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.68 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.68 திட்டத்தில் இதற்குமுன்பு 1ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும்
இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.14 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.14 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா வரை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தை ஒருநாள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் ரூ.29 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தை 3நாட்கள் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL revises Rs 198 Rs 155 prepaid plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X