நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

மேலும் இந்த புதிய சலுகை பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கயாளர்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் அதன் போஸ்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

மேலும் இந்த புதிய சலுகை பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கயாளர்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளும் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தகவல் கசிந்துள்ளது.

ஜூலை 1:

ஜூலை 1:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கும் கூடுதலான டேட்டா வழங்கப்பட இருப்பதாகவும், பின்பு இந்த சலுகை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இவற்றின் தினசரி டேட்டா அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பதால் தினசரி டேட்டா அளவை கடந்தததும், டேட்டா வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்பெயிட் சலுகை:

போஸ்ட்பெயிட் சலுகை:

மேலும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகை மற்றும் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளில் கூடுதலான டேட்டா கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் போஸ்ட்பெயிட் சலுகைகள் ரூ.99 துவங்கி அதிகபட்சம் ரூ.1,525 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

365 நாட்கள்:

365 நாட்கள்:

இதற்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிரீப்பெயிட் பயனர்களுக்கு ரூ.1,999 விலையில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை
அறிவித்தது, மேலும் இந்த திட்டத்தை 365 நாட்கள் பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள் இவற்றில் வழங்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி: அதென்ன திட்டம்:

1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி: அதென்ன திட்டம்:

முன்னதாக ரஷ்யாவில் நடக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழாவை இன்னும் சிறப்பிக்கும் வண்ணம், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமானது ஒரு புதிய எஸ்டிவி பிளானை அறிவித்துள்ளதும், அந்த புதிய திட்டமானது ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பிபா உலகக் கோப்பை கொண்டாட்டம் நடக்கும் முழு காலத்திற்கும் செல்லுபடியாகும்.

 மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

ரூ.149/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த பிபா உலக கோப்பை டேட்டா திட்டமானது தினமும் 4ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 112 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். இதுவொரு பிபா விளம்பர திட்டம் என்பதை மீண்டும் நினைவுறுத்தி விரும்புகிறோம். மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் - இது மும்பை மற்றும் தில்லி வட்டாரத்திற்கு செல்லுபடியாகாது. இந்த இரண்டு வட்டங்களை தவிர்த்து, இதர நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் இந்தத் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

51 நாட்களுக்கு செல்லுபடியாகும்:

கடந்த ஏப்ரல் மாதத்தில், அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.248/- என்ற ஒரு கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது. இப்போது பிபா கோப்பைக்கான ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. துரதிருஷ்டவசமாக, பிஎஸ்என்எல் தன்னுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Revises Postpaid Plans, Data Add-On Plans to Offer Unlimited Data, Rivalling Jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X