மீண்டும் மீண்டும் வெறுப்பை சம்பாதிக்கும் பிஎஸ்என்எல்; அப்படி என்ன செய்தது.?

|

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இலவச இரவு அழைப்பு நேரங்களில் திருத்தங்களை நிகழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மீண்டும் வெறுப்பை சம்பாதிக்கும் பிஎஸ்என்எல்; அப்படி என்ன செய்தது.?

வெளியாகியுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் சிடிஎம்ஏ பிக்ஸட் / சி.டி.எம்.ஏ. மொபைல் இணைப்புகளுக்கான இலவச அழைப்பு நன்மைகளானது இனி இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை வழங்கப்படும். இந்த புதிய மாற்றமானது 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் சிடிஎம்ஏ திட்டங்களின் வழியாக வீட்டு வட்டங்களுக்குள்ளான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது. இதன் அர்த்தம் வரம்பில்லாத ஆன்-நெட் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.

இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை

இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை

முன்னதாக, இந்த இலவச குரல் அழைப்புகளுக்கான நேர வரம்பானது இரவு 9:00 மணி முதல் காலை 7 மணி வரை என்று இருந்தது. இப்போது இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை என்று நிறுத்தப்பட்டுள்ளது. அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனமானது மீபத்தில் இதே மாதிரியான திருத்தத்தை அதன் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் எப்டிடிஎச் திட்டங்களில் நிகழ்த்தியது.

ஆக்கிரோஷம்

ஆக்கிரோஷம்

அதன்படி பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான இலவச வரம்பற்ற இரவு குரல் அழைப்புகளின் வரம்பானது இரவு10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2018 முதல் செயல்படுத்தப்பட்டன. இந்த புதிய ஆண்டு துவங்குவதிலிருந்தே பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பயனர்கள் மீது ஆக்கிரோஷமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது

ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது

முதலில், இலவச குரல் அழைப்பு நேரங்களை மறுசீரமைப்பதன் மூலம் பிராட்பேண்ட் பயனர்களின் வெறுப்பை சம்பாதித்தது. பின்னர் ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது. இப்போது சிடிஎம்ஏ போஸ்ட்பெயிட் திட்டத்தின் நேரங்களை திருத்தியுள்ளது.

அழுத்தத்தை உணரமுடிகிறது

அழுத்தத்தை உணரமுடிகிறது

இந்த நடவடிக்கைகளில் இவர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் இருந்து பிஎஸ்என்எல் பெறும் அழுத்தத்தை உணரமுடிகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Revises Free Night Voice Calling Timings. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X