பிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; ஜன.15 முதல் அமல்.!

|

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் மீண்டும் இந்திய டெலிகாம் துறைக்குள் நடக்கும் கட்டண யுத்தத்திற்குள் நுழைந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து மிகவும் வேகமான நடவடிக்கைகளை கையாண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஜியோவிற்கு எதிரான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து அசத்தியது.

பிஎஸ்என்எல் அதிரடி: மொத்த ரீசார்ஜ்களையும் திருத்தியது; ஜன15 முதல் அமல்

அதன் பின்னர் சற்று பொறுமையாக பின்வாங்கி, சந்தையில் நடக்கும் கட்டண யுத்தத்தை வேடிக்கை பார்த்த பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் பிராதன திட்டங்களில் செல்லுபடியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது மற்றும் இரவு அழைப்புகள் மீதான வரம்பு ஆகிய திருத்தங்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் போட்டியிடுவதை வெளிப்படையாக நிறுத்திக்கொண்டதை அறிய முடிந்தது. ஆனால் அது பின்வாங்குதல் அல்ல மாஸ்டர் பிளான் என்பது நேற்று மாலை அம்பலமானது.

ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்

ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்

சில மாத கால தாமதத்திற்கு பின்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வருகிற ஜனவரி 15, 2018 முதல் அமலுக்கு வரும்.

ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன

ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன

இந்த திருத்தத்தில் ஒட்டுமொத்தமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆறு கட்டண திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அவைகள் ரூ.186, ரூ.187, ரூ.349, ரூ.429, ரூ.485 மற்றும் ரூ.666 ஆகியவைகள் ஆகும். இந்த திட்டங்கள் அனைத்துமே ஜியோவின் சமீபத்திய அறிமுகங்களுடன் ஒற்றுப்போகும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் பிவி186

பிஎஸ்என்எல் பிவி186

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நுழைவு நிலை திட்டமான ரூ.186/-ல் நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தங்களை பொறுத்தமட்டில், இனி இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட

வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட

முன்னதாக, ரூ.186/- ஆனது வீட்டு வட்டத்திற்கான உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை மட்டுமே வழங்குமொரு திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ரூ.187/- திட்டத்தை போலவே இந்த திட்டமும் டேட்டா மற்றும் வாய்ஸ் என்கிற காம்போ நன்மைகளை வழங்குகிறது. ரூ.187/-ஐ பொறுத்தமட்டில் ரூ.186/-ன் நன்மைகளையே வழங்குகிறது. இங்கு வரம்பற்ற அழைப்புகள் என்பது வீட்டு வட்டம் மற்றும் தேசிய ரோமிங் உட்பட என்று அர்த்தம்.

இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும்

இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும்

திருத்தம் கண்டுள்ள மூன்றாவது திட்டமான ரூ.349/- ஆனது இனி அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி 54 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்

81 நாட்களுக்கு செல்லுபடியாகும்

81 நாட்களுக்கு செல்லுபடியாகும்

மறுகையில் உள்ள ரூ.429/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில் அதே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கினாலும். ரூ.329/-ஐ விட இந்த திட்டம் அதிக செல்லுபடி காலம், அதாவது 81 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டா

நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டா

திருத்தம் கண்டுள்ள ஐந்தாவது திட்டமான ரூ.485/- என்கிற நிறுவனத்தின் நீண்ட காலம் செல்லுபடியாகும் ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமொரு திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் சமீபத்தில் 74 நாட்களாக குறைக்கப்பட்டது. தற்போது ஒரு விரைவான நடவடிக்கையாக ரூ.485/-ன் நன்மைகள் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும்

மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும்

இறுதியாக, ரூ.666/- கட்டண திருத்தத்தின் விவரங்களை காண்போம். பிஎஸ்என்எல்-ன் சிறந்த நன்மைகளை வழங்குமொரு திட்டமான ரூ.666/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை இனி மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மை

வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மை

சுமார் நான்கு மாத காலம் செல்லுபடியாகும் ரூ.666/- திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் பல பிரதான திட்டங்களுக்கு கடும்போட்டியை உண்டாக்குமொரு ரீசார்ஜ் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த திட்டங்களின் வரம்பற்ற ரோமிங் அழைப்பு நன்மைகளானது (நிறுவனத்தின் சேவைகள் இல்லாத) மும்பை மற்றும் டெல்லிக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Revises Entire Tariff Portfolio; Rs 485 Pack Now Offers 1.5GB Per Day, Unlimited Voice Calls for 90 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X