Just In
- 18 min ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 35 min ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- 24 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
Don't Miss
- News
காவல்துறை அனுமதியுடன் சென்னையில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்! வள்ளுவர் கோட்டத்தில் பார்த்த மக்கள்
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பதறிப்போன பிஎஸ்என்எல்: 8 திட்டங்களின் அதிரடி திருத்தம்.!
தனியார் தொலைதொடர்பு இயக்குனர்களை தொடர்ந்து பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனமும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான கட்டண யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து அதன் 3ஜி ப்ரீபெய்ட் தரவு ரீசார்ஜ் திட்டங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை நிகழ்த்திய வண்ணம் உள்ளது. அதாவது சில இணையத் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கவும் மற்றும் டேட்டா நன்மைகளை அதிகரித்தும் ஏற்கனவே இருக்கும் பயனர்களை, புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதிகபட்சமாக 120 நாட்கள் வரை
அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 8 கட்டண திட்டங்களின் நன்மைகளை திருத்தியுள்ளது. குறைந்தப்பட்சம் 25 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக 120 நாட்கள் வரை செல்லுபடியாகும் திருத்தப்பட்ட 8 திட்டங்களின் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

பிஎஸ்என்எல் 109
இந்த ரூ.109/- தரவு ரீசார்ஜ் வூச்சர் ஆனது மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 1536 எம்பி அளவிலான 3ஜி இணைய தரவை வழங்குகிறது. மேலும் இதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (PRBT) சேவையையும் வழங்கும். இருப்பினும், இந்த வாய்ப்பை கிழக்கு மண்டலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் 198
இந்த பிஎஸ்என்எல் ரூ.198/- தரவு ரீசார்ஜ் திட்டமானது 1 ஜிபி தினசரி தரவுப் பயன்பாட்டுடன் வருகிறது. மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 291
இந்த ரூ. 291/- தரவு திட்டமானது நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான இணைய பயன்பாட்டை வழங்குகிறது மற்றும் 25 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த டேட்டா பேக் ஆனது இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையையும் வழங்குகிறது.


பிஎஸ்என்எல் 333
நிறுவனத்தின் ட்ரிபிள் ஏஸ் திட்டம் என்று அழைக்கப்படும் ரூ.333/- என்கிற திட்டமானது வரம்பற்ற இணைய பயன்பாடு மற்றும் இலவச ரிங்டோன் சேவையுடன் வருகிறது. இந்த தரவுத் திட்டம் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி அளவிலான அதிவேக இணையத் தரவை வழங்குகிறது. அந்த வரம்பிற்கு பின்னனர் 80கேபிபிஎஸ் வேகத்திலான டேட்டாவை அனுபவிக்கலாம். மொத்தம் 41 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானதும் இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 444
நிறுவனத்தின் சௌகா எஸ்டிவி என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் ரூ.444/- என்கிற டேட்டா ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற இணைய தரவை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக இண்டர்நெட் வரம்பை கொண்டுள்ளது. அதற்கு பின்னர் வேகம் 80கேபிபிஎஸ் என குறையும்.

பிஎஸ்என்எல் 549
நிறுவனத்தின் ரூ.549/- என்கிற தரவு ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான அதிவேக இணைய தரவு பயன்பாட்டை வழங்குகிறது. உடன் இந்த டேட்டா பேக் ஆனது இலவச பெர்சனலைஸ்டு ரிங் டோன் சேவையையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் 561
ரூ.561/- என்கிற தரவு ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த தரவு திட்டம் 80 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது மற்றும் இதன் திட்டம் அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலாக இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (PRBT) சேவையையும் வழங்கும். நீண்ட கால டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தை தேடும் மக்களுக்கு இதுவொரு சிறப்பான தேர்வாகும்

பிஎஸ்என்எல் 821
இந்த ரூ.821/- ஆனது நிறுவனத்தின் மற்றொரு நீண்ட கால திட்டமாகும். நீண்டகால டேட்டா பில்கள் பற்றி கவலைப்படும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டம் மொத்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும் வானம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470