பிஎஸ்என்எல் 500ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் மீது அதிரடி திருத்தம்.! முழுவிவரங்கள்
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் தொடர்நது பல்வேறு சலுகைககள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் நிறுவனம்"500GB CUL" என்று அழைக்கப்படும் தனது ரூ.777 திட்டத்தை தற்போது திருத்தி உள்ளது. தற்சமயம்இந்த திட்டம் 100எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.

அதாவது கடந்த 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 500ஜிபி சியூஎல் திட்டமானது, வாபஸ் பெறப்பட்டு, பின்பு 2019-ம் ஆண்டின் துவகத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டின் துவகத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த 500ஜிபி சியூஎல் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜூன் வரை செல்லுபடியாகும் என்று அறிவித்தது.

இருந்தபோதிலும் ஜூன் மாதத்தில் ரூ.777 திட்டமானது 2020 செப்டம்பர் 24 வரை அருணாச்சல பிரதேசம் போன்ற சில வட்டங்களில் மட்டுமே நீட்டித்தது, மற்ற வட்டங்களுக்கு 2020 செப்டம்பர் 25 வரை இந்த திட்டம் வழங்கப்பட்டது.

இப்போது பிஎஸ்என்எல் ரூ.777 திட்டம் ஆனது 500ஜிபி வரையிலான டேட்டாவை 100எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 500GB CUL திட்டத்துடன் சேர்ந்த பயனர்களுக்கு இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த பிஎஸ்என்எல் ரூ.777 திட்டம் ஆனது 500ஜிபி வரையிலான டேட்டாவை 50 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்கியது. குறிப்பிட்ட வரம்பை அடைந்தவுடன் இணைய வேகமானது 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

மேலும் தற்சமயம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை தவிர இந்தியா முழுவதும் உள்ள புதிய பயனர்களுக்கு 500 ஜிபி CUL திட்டம் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. குறிப்பாக 500ஜிபி CUL திட்டமானது "90 நாட்களுக்கு விளம்பர அடிப்படையில்" கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ரூ.777 திட்டத்திற்கு சந்தா செலுத்தும் புதிய பயனர்கள் ஒரு மாதத்தில் நிர்ணயத்தில் திட்டத்திற்கான குறைந்தபட்ச வாடகைகாலத்துடன், பாதுகாப்பு வைப்புத்தொகையா ஒரு மாத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு இந்த திட்டத்தின் முந்தைய பதிப்பைப் போலவே 500GB CUL திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் ஆறு மாத காலத்திற்குள் 600GB CUL திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். பின்பு அது மாதத்திற்கு ரூ.849-என்கிற விலையில் 600ஜிபி அளவிலான டேட்டாவை 50எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்கும், குறிப்பிட்ட வரம்பை எட்டியவுடன் இணைய வேகம் 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications